Latest Updates
-
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
குருவின் அருளால் இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 2024 ஏப்ரல் 27 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் காதல் நிறைந்ததாக இருக்கும். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதில் இருந்த தடைகள் இந்த வாரத்தில் நீங்கும். நிதி ரீதியாக இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகள் புத்திசாலித்தனமாக முடிவுகளை நன்கு யோசித்து எடுத்தால், எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை, திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு மேம்படும். வியாபாரிகளின் நிதி நிலை வலுவடையும். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்களின் நீண்ட நாள் வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். மிகப்பெரிய நிதி நன்மைகளை இந்த வாரத்தில் பெறுவீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் அருமையாக இருக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடினமாக இருக்கும். வணிகர்கள் இந்த வாரத்தில் அவசரமாக எந்த ஒரு வேலையையும் அல்லது முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பலவீனமாகலாம். நிறைய மருத்துல செலவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக நீங்கள் மிகவும் மன உளைச்சலில் இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் கூட்டு தொழிலை செய்து வந்தால், இந்த வாரம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாகலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் மோதலைத் தவிர்க்க வேண்டும். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, மிகவும் புத்திசாலித்தனமாக செலவுகளை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரம் பட்ஜெட்டை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கையில் கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், குடும்ப உறுப்பினர்கள் உங்களை விட்டு பிரியலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலைப்பளு அதிகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் நடத்தை உங்களை தொந்தரவு செய்யும். வேலைப்பளு அதிகரிப்பது, உங்கள் மனக்கவலையை அதிகரிக்கும். எந்த ஒரு முடிவுகளையும் சிந்தனையுடன் செய்தால் நல்லது. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு வேலையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் மிகவும் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை அவர்களை வருத்தமடையச் செய்யலாம். இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் மிகவும் பலவீனமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications