வார ராசிபலன் (24 September 2023 To 30 September 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் கனவுகள் நிறைவேறும்..

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் 2023 செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 24 September 2023 To 30 September 2023 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த வாரத்தில் சில ஆபத்தான முடிவுகளை எடுக்கக்கூடும் மற்றும் அந்த முடிவுகளால் நல்ல பலனும் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலைமையை மேம்படுத்த, செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். யாருக்கேனும் கடன் கொடுத்திருந்தால், அந்த பணத்தைப் பெற அடிக்கடி கேளுங்கள். இல்லாவிட்டால், அந்த பணம் கைக்கு கிடைக்காமல் போய்விடும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணம் சிறப்பானதாக இருக்கும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இந்த காலகட்டத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறப்பான நேரத்தை செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். சில பருவகால நோய்களால் சிரமப்படுவீர்கள். நிதி ரீதியாக, அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். பழைய கடனையோ அல்லது கடனையோ திருப்பிச் செலுத்த வேண்டிய அழுத்தத்தில் நீங்கள் இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியில் இருப்பவர்கள் அலுவலகத்தில் முழு நம்பிக்கையுடன் தங்கள் வேலையைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்களுக்கு இந்த வாரம் சுமாராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக சற்று பலவீனமாக இருக்கும். திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். மேலும் உங்கள் பணம் திருட்டு போகவோ அல்லது தொலைந்து போகவோ வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதாரணமாக இருக்கும். வேலையுடன் குடும்ப உறுப்பினர்களுடனும் போதுமான நேரத்தை செலவிட வேண்டும். இல்லையெனில் உறவுகளில் இடைவெளி அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பு நல்ல பலனளிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுமாராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரி உங்கள் கடின உழைப்பைக் கவனிப்பார் மற்றும் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பண விஷயத்தில் இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள்: புதன்

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் மாமியாருடன் வாக்குவாதம் ஏற்படலாம். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருப்பீர்கள். பல வகையான எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றும். வாரத்தின் நடுப்பகுதியில் வேலை தொடர்பான பயணத்தை மேற்கொள்ள நேரிடும். இந்த வாரம் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பட்ஜெட்டுக்கு ஏற்ப செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்காது. ஆரோக்கிய விஷயத்தில் கவனக்குறைவுடன் இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்திறனில் பெரிய முன்னேற்றம் இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். இதனால் உங்கள் மன அமைதி பாழாகும். நிதி ரீதியாக, இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: திங்கட்கிழமை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆனால் நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்காது. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த ஒரு முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைகளையும் தவிர்க்க வேண்டும். மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் எந்த நிதி முடிவையும் எடுக்காதீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த வாரத்தில் உங்கள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் பரம்பரை தொழிலில் இருந்து பிரச்சனைகள் தீரும். நல்ல பண பலன்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைத்தால், புதிய வாய்ப்புக்களைப் பெறலாம். நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். வார இறுதியில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு சவாலானதாக இருக்கும். அலுவலகத்தில் திடீரென்று பிரச்சனைகள் வரலாம். இந்நிலையில் உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து அதை தீர்க்க முயற்சிக்க வேண்டும். தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்காது. இந்த வாரத்தில் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். தாயுடனான உறவு நன்றாக இருக்கும். வார இறுதியில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம். நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பல முக்கியமான வேலைகளும் தடைபடும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: புதன்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் வலுவாக இருப்பீர்கள். சிறு முடிவுகளை கூட புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் பெரிய செலவுகளை செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு லாபகரமாக இருக்கும். உங்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல வரன் தேடி வரும். நிதி நிலை வலுவாக இருக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: திங்கட்கிழமை

Story first published: Sunday, September 24, 2023, 6:00 [IST]
Desktop Bottom Promotion