Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
கடக ராசியில் வக்ரமாகும் சுக்கிரனால் இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு பண மழை கொட்டப் போகுது..
Venus Retrograde In Cancer On August 2023: வேத ஜோதிடத்தின் படி, அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து வக்ர நிலையில் பயணித்து ஆகஸ்ட் 07 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் கடக ராசியில் நுழைந்த மறுநாளே சுக்கிரன் வக்ரமாகியுள்ளார். இப்படி சுக்கிரன் கடக ராசியில் வக்ரமாகியிருப்பது, அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் சுக்கிரனின் நிலையால் திடீர் பண வரவையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் வக்ர நிலையில் உள்ளார். இதனால் இக்காலத்தில் அனைத்துவிதமான இன்பங்களையும் சுக்கிரன் பெற வைப்பார். மேலும் இக்காலத்தில் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அது நிறைவேறும். வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் இந்த ராசியின் 10 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன் லாபமும் கிடைக்கும்.
கலைத் துறையில் இருப்பவர்கள் நல்ல புகழைப் பெறுவார்கள். வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண வரவு கிடைக்கும். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். காதலிப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
