Latest Updates
-
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?
சுக்கிரன் உருவாக்கியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 12 நாட்கள் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கும்..
Venus Made Malavya Rajyog 2024: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்த சுக்கிரன் தற்போது தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். 1 வருடம் கழித்து சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றுள்ளதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த ராஜயோகமானது ஒரு மங்களகரமான யோகம். இந்த யோகத்தால் ஒருவரது நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் கிடைக்கும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சுக்கிரனால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 12 நாட்கள் அற்புதமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகமானது மங்களகரமானதாக இருக்கும். வருமான வீட்டில் சுக்கிரன் இருப்பதால், வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். வியாபாரிகள் புதிய யோசனைகளால் எதிர்காலத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்ற மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான இணக்கம் முன்பை விட சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications