Latest Updates
-
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி, பர்ஸில் 21 அரிசியை இந்த மாதிரி வெச்சா.. பணம் அதிகம் சேருமாம்...
Vastu Tips In Tamil: உங்கள் பர்ஸில் பணம் சேர்வதில்லையா? எப்போதும் உங்கள் பர்ஸ் காலியாகவே உள்ளதா? அப்படியானால் உங்கள் பர்ஸில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் இருக்க வாய்ப்புள்ளது.
வாஸ்துப்படி எந்த ஒரு இடத்தில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் பொருள் உள்ளதோ, அங்கு பிரச்சனைகள் நிறைந்திருக்கும் மற்றும் பணம் எதுவும் சேராது. ஒருவர் தங்கள் பர்ஸில் வெறும் பணத்தை மட்டும் வைத்திருப்பதில்லை. அதைத் தவிர பல விஷயங்களையும் வைத்திருப்போம்.

இப்படி கண்டதை வைத்தால், அந்த பர்ஸில் பணம் எப்போதும் நிலைத்திருக்காது. வாஸ்துப்படி, பயன்படாதவற்றை பர்ஸில் வைத்திருந்தால், அவற்றை உடனே வெளியேற்றுங்கள். ஏனெனில் பயன்படாதவைகள் எதிர்மறை ஆற்றலை கொண்டிருக்கும்.
அதோடு, பர்ஸில் ஒருசிலவற்றை வைப்பதன் மூலம், எப்போதும் பணம் நிலைத்திருக்கும். இப்போது வாஸ்துப்படி எவற்றை பர்ஸில் வைத்திருக்க வேண்டும் மற்றும் எவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
கிழிந்த நோட்டுகள்
கிழிந்த நோட்டுகள் அல்லது செல்லாத நோட்டுகளை பர்ஸில் எப்போதும் வைத்திருக்காதீர்கள். ஏனெனில் இந்த வகை நோட்டுகள் பர்ஸில் பணத்தை சேர்ப்பதற்கு பதிலாக, அதிக செலவுகளை செய்யத் தூண்டும். இதன் மூலம் பணம் எப்போதும் பர்ஸில் நிலைத்திருக்காமல் காலியாகவே இருக்கும். ஆகவே பர்ஸ் எவ்வளவு சுத்தமாக உள்ளதோ, அவ்வளவு பணம் பர்ஸில் சேரும்.
லட்சுமி தேவியின் போட்டோ
பர்ஸில் பணம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டுமானால், லட்சுமி தேவியின் போட்டோவை அவசியம் வைத்திருக்க வேண்டும். இப்படி வைத்திருப்பதன் மூலம் பணம் எப்போதும் பர்ஸில் நிரம்பியிருக்கும். ஆனால் லட்சுமி தேவியின் போட்டோவை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதோடு ஸ்ரீயந்திரத்ரத்தையும் பர்ஸில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இதுவும் லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது.
சாவியை வைத்திருக்காதீர்கள்
வாஸ்துப்படி, சாவியை எப்போதும் பர்ஸில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படி வைத்தால், அந்நபரின் பர்ஸில் பணம் எப்போதும் நிலைத்திருக்காது மற்றும் பண பிரச்சனையால் அதிகம் சிரமப்பட நேரிடும்.
அரிசியை வைக்கவும்
உங்கள் பர்ஸில் பணம் எப்போதும் நிரம்பியிருக்க வேண்டுமா? அப்படியானால் 21 உடையாத அரிசியை ஒரு மஞ்சள் துணியில் வைத்து கட்டி, அதை பர்ஸில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் பண வரவு சிறப்பாக இருக்கும். பணத்திற்கு பஞ்சமே இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications