Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
வாஸ்துப்படி இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லன்னா வாழ்வில் எப்பவும் வெற்றி கிடைக்கவே கிடைக்காது...
Vastu Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியங்களிலும் வெற்றி காண வேண்டுமென்று விரும்புவோம். ஆனால் நாம் செய்யும் சில சிறு தவறுகள் அல்லது சில விஷயங்களால் நமக்கு கிடைக்க வேண்டிய வெற்றியில் தடை ஏற்படக்கூடும் என்பது தெரியுமா?
ஆம், வாஸ்து சாஸ்திரத்தின் படி, நமது ஒவ்வொரு செயல்களும் நமது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நமது பழக்கவழக்கங்களாக இருக்கட்டும், வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்களாக இருக்கட்டும், அவை ஒவ்வொன்றும் நமது வாழ்வின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தக்கூடும்.

கீழே ஒருவரது வெற்றியில் தடையை ஏற்படுத்தும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அறிந்து, அந்த தவறுகளை செய்வதைத் தவிர்த்திடுங்கள்.
* நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்தாலோ அல்லது அலுவலகத்தில் வேலை செய்தலோ, நுழைவாயிலின் கதவைப் பார்த்து முதுகைக் காட்டி அமர்வதைத் தவிர்க்க வேண்டும். முதுகைக் காட்டி உட்கொண்டால், உங்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியில் இடையூறு ஏற்படும்.
* நம் வீட்டில் தொடங்க விடும் காலெண்டரும் ஒருவரது முன்னேற்றத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவே இப்படிப்பட்ட காலெண்டரை எக்காரணம் கொண்டும் கதவிலோ அல்லது கதவின் வழியிலோ தொங்க விடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது அந்த குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை பாதிக்கும்.
* ஒவ்வொருவரது வீட்டிலும் கடிகாரம் அவசியம் இருக்கும். இந்த கடிகாரம் சரியான நிலையில், அதாவது உடையாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். உடைந்த கடிகாரம் அல்லது ஓடாத கடிகாரம் வீட்டில் இருந்தால், அது வீட்டில் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். முக்கியமாக இது ஒருவரது வாழ்வின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்துவதோடு, நிதி இழப்பை உண்டாக்கும்.
* தென்கிழக்கு திசை மரத்தைக் குறிக்கிறது. இந்த திசையில் கத்தரிக்கோல், கத்தி போன்ற கூர்மையான பொருட்களை வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது அந்த வீட்டில் சுற்றும் நேர்மறை ஆற்றலில் இடையூறை ஏற்படுத்தி, வீட்டில் பண பிரச்சனையை ஏற்படுத்துவதோடு, வெற்றி மற்றும் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும்.
* தென்மேற்கு மூலையானது ஆசைகள் மற்றும் உறவுகளுடன் தொடர்புடையது. இந்த மூலையில் செடிகளை வைத்து வளர்த்தால், அது நேர்மறை ஆற்றலை மோசமாக பாதிக்கும். அதோடு வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே உங்கள் வீட்டின் இந்த மூலையில் செடியை வளர்த்து வந்தால், உடனே அதை அப்புறப்படுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications