Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி, தூங்கும் போது இந்த பொருட்களை தலைக்கு பக்கத்துல வெச்சு தூங்காதீங்க..
Vastu Tips In Tamil: நாம் அனைவரும் தூங்கும் போது நமது வசதிக்காக நமக்கு அருகில் ஒருசில பொருட்களை வைத்துக் கொண்டு தூங்குவோம். உதாரணமாக, தலைக்கு அருகில் வாட்டர் பாட்டில் வைத்துக் கொள்வோம், போனை வைத்துக் கொள்வோம்.
இன்னும் சிலர் படித்துக் கொண்டு தூங்குவதால் புத்தகத்தை வைத்துக் கொண்டு தூங்குவார்கள். இவை அனைத்துமே தூங்கும் போது மேற்கொள்ளும் ஒருவரது தினசரி பழக்கங்களுள் ஒன்று. ஆனால் இப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் மோசமான பழக்கங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த பழக்கங்களை ஒருவர் தூங்கும் போது கொண்டிருந்தால், அது அவர்களுக்கு பலவிதமான பிரச்சனைகளைத் தருவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது ஒருவர் தூங்கும் போது எந்த மாதிரியான பொருட்களை தலைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்கக்கூடாது என்பதைக் காண்போம்.
எலக்ட்ரானிக் பொருட்கள்
எப்போதுமே ஒருவர் தூங்கும் போது, தலைக்கு அருகில் மொபைல் போனை வைத்துக் கொண்டு தூங்கக்கூடாது. இதனால் அதிலிருந்து வெளிவரும் கதிர்கள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாஸ்துப்படி இம்மாதிரியான பழக்கம் பண இழப்பை உண்டாக்குவதோடு, வாழ்வில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே மொபைல் ஃபோனை மட்டுமின்றி வேறு எந்த எலக்ட்ரானிக் பொருட்களையும் தலைக்கு அருகில் வைத்து தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
புத்தகம்
இரவு தூங்கும் முன் புத்தகத்தை தலைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்காதீர்கள். இல்லாவிட்டால், அது ஒருவரைச் சுற்றி எதிர்மறை ஆற்றலை அதிகரித்து,, வாழ்வில் முன்னேற்றத்தைத் தடுக்கும். எனவே உங்களின் வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தால், அதற்கு இந்த பழக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்.
தங்கம்
நிறைய பேர் இரவு தூங்கும் முன், கைகளில் மற்றும் காதுகளில் உள்ள காதணிகள் மற்றும் வளையல்களை கழற்றி தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்குவார்கள். வாஸ்துப்படி, தங்கத்தை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கினால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மேலும் இது கோபத்தை வழிவழைத்து, உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். மேலும் இந்த பழக்கம் உள்ளவர்கள் வாழ்வில் பலவிதமான தடைகளை சந்திப்பார்கள்.
கண்ணாடி
எப்போதுமே கண்ணாடியானது படுக்கையை நோக்கியவாறு இருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது திருமண வாழ்வில் பிரச்சனையை அதிகரிக்கும். முக்கியமாக படுக்கும் போது உங்கள் பிம்பம் கண்ணாடியில் படாதவாறு இருக்க வேண்டும். இல்லையெனில் பேய்கனவு வந்து பயமுறுத்தும்.
கழுவாத கப்
நிறைய பேர் படுக்கை அறையிலேயே கழுவாத டீ கப்பை வைத்திருப்பார்கள். இப்படி கழுவாத கப்புகளை படுக்கையறையில் வைத்திருந்தால், அது வறுமைக்கு வழிவகுக்கும். மேலும் இம்மாதிரியான பொருட்கள் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, இரவு நல்ல தூக்கத்தைப் பெற முடியாமல் தடுக்கும்.
அழுக்குத் துணிகள்
சில சமயங்களில் நாம் சோம்பேறித்தனப்பட்டு, அழுக்குத் துணிகளை படுக்கையிலேயே விட்டுவிடுவோம். அழுக்குத் துணிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்துவிடும். எனவே உங்கள் வாழ்வில் எந்த ஒரு நல்லதும் நடக்காமல் இருந்தால், அதற்கு உங்கள் வீட்டின் படுக்கையின் மீதுள்ள அழுக்குத் துணிகள் காரணமாக இருக்கலாம்.
வாட்டர் பாட்டில்
பெரும்பாலானோர் இரவு தூங்கும் முன் ஒரு பாட்டில் நீரை நிரப்பி, அவற்றை தலைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்குவார்கள். ஆனால் வாஸ்துப்படி, இப்படி தலைக்கு, அருகில் நீரை வைத்து கொண்டு தூங்கினால், ஜாதகத்தில் உள்ள சந்திரன் பாதிக்கப்படுவார். சந்திரனின் நிலை பாதிக்கப்பட்டால் மனநல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். எனவே தூங்கும் முன் நீர் பாட்டிலை தலைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


