Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இன்று இந்த பொருட்களை தானம் செய்தால் லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் செல்வம் பெருகுமாம்...
Varalakshmi Vratham 2023: இந்து மதத்தில் வெள்ளிக்கிழமை மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. அதுவும் இந்நாள் செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதேப் போல் சுக்கிரனுக்கும் உரிய நாளாகும்.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அந்நபர் வாழ்வில் பணப்பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார் மற்றும் குடும்ப நிலை மோசமாகவும், வசதிகள் குறைவான வாழ்க்கையையும் வாழ்வார். எனவே ஒருவர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், சுக்கிரனை வலுப்படுத்தும் பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதே சமயம் லட்சுமி தேவியின் அருள் ஒருவருக்கு இருந்தால் தான், அந்நபர் செல்வம், சொத்து, புகழ் போன்றவற்றை பெறுவார் மற்றும் வாழ்க்கை பிரகாசமாகவும் இருக்கும். ஆகவே லட்சுமி தேவியின் அருளைப் பெறவும், சுக்கிரனை வலுப்படுத்தவும் வேண்டுமானால், வெள்ளிக்கிழமைகளில் ஒருசிலவற்றை தானம் செய்வது நல்லது.
அதுவும் இன்று வரலட்சுமி விரதம். இந்நாளில் பெண்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெற கலசம் வைத்து பூஜை செய்து, லட்சுமி தேவியை வழிபடுவார்கள். இந்நாளில் லட்சுமி தேவியின் அருளைப் பெற ஒருசில பொருட்களை தானம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். இப்போது எந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.
* லட்சுமி தேவிக்கும், சுக்கிரனுக்கும் வெள்ளை நிற பொருட்கள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆகவே வெள்ளிக்கிழமைகளில் பால், தயிர், பாயாசம், வெள்ளை சந்தனம், வெள்ளி போன்றவற்றை தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம், சுக்கிரன் தொடர்பான தோஷங்கள் நீங்குவதோடு, லட்சுமி தேவியின் அருளைப் பெறக்கூடும்.
* வெள்ளிக்கிழமைகளில் தேன், வளையல்கள், குங்குமம், சிவப்பு நிற புடவை போன்ற மங்களகரமான பொருட்களை திருமணமான பெண்களுக்கு வழங்கினால், லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவார் மற்றும் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
* வெள்ளிக்கிழமைகளில் பழைய புத்தகங்கள் அல்லது பழைய காலணிகளை ஏழை எளியோருக்கு தானமாக வழங்கினால், லட்சுமி தேவியின் அருளால் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
* பழைய பர்னிச்சர்கள் மற்றும் பாத்திரங்களை வெள்ளிக்கிழமைகளில் ஏழை எளியோருக்கு வழங்கினால், அவரது வாழ்வில் எவ்விதமான பொருள் பற்றாக்குறையும் ஏற்படாது. எப்போதும் லட்சுமி தேவியின் அருளால் வீடு எப்போதும் செல்வ செழிப்போடு இருக்கும்.
* எளிய வழியில் லட்சுமி தேவியை மகிழ்ச்சி அடைய செய்து, அவரது பரிபூர்ண அருளைப் பெற வேண்டுமானால், வெள்ளிக்கிழமைகளில் பாயாசம் செய்து, அதை லட்சுமி தேவிக்கு படைத்து வழிபட்டு, அதை பிரசாதமாக மற்றவர்களுக்கு வழங்குங்கள். இப்படி செய்வதன் மூலம் பணமும், தானியங்களும் எப்போதும் நிரம்பியிருக்கும். வீடு ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும்.
* ஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் சுக்கிரனை வலுப்படுத்த எளிய பரிகாரம், வெள்ளிக்கிழமைகளில் உப்பை தானம் செய்வது தான்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications