Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Today Rasi Palan 23 December 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் புதிய வேலைகள் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். டிசம்பர் 23ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.30-9 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 9.00-10.30 மணி வரை. குளிகை காலை 6.00-7.30 மணி வரை. எமகண்டம் காலை 1.30-3.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. உத்திரம், ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் எல்லா வேலைகளையும் கவனமாக செய்யவும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். குழந்தைகளின் படிப்பிற்காக அதிக பணம் செலவழிக்க நேரிடும். நீங்கள் திருமணமாகாதவராகவும், உங்களின் விருப்பமான வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களாகவும் இருந்தால், இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்றைய நாளின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி, முக்கியப் பணிகளில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் நிலுவையில் இருந்த வேலைகள் இன்றே நிறைவேற வாய்ப்புகள் அதிகம். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தந்தையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு சரியான கவனிப்பு தேவை.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:20 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, மாணவர்கள் இன்று கல்வி தொடர்பான பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். பல வகையான எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றலாம். நேர்மறையாக இருந்து கடினமாக உழைக்கவும். வியாபாரிகள் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மூன்றாம் நபரை அதிகமாக நம்பாதீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். எந்தவொரு வேலையையும் நாளை என தள்ளிப் போடாதீர்கள். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில், இன்று கலவையான முடிவுகளைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சில முன்னேற்றங்களைக் காணலாம். வருமானத்தை விட அதிகமாக செலவு செய்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கலாம். அலுவலகத்தில் அதீத நம்பிக்கையைத் தவிர்க்கவும். வணிகர்கள் முக்கியமான வணிக முடிவுகளை எடுப்பதற்கு முன்பு கவனமாக சிந்திக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் புதிதாக கூட் வியாபாரம் தொடங்கப் போகிறீர்கள் என்றால், அவசரப்பட வேண்டாம். உங்கள் துணையின் மாறுபட்ட நடத்தை உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 9:20 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழிலதிபர்களின் எந்தவொரு முக்கிய பிரச்சனையும் இன்று தீரும். இன்று நீங்கள் ஒரு முக்கியமான வணிக முடிவையும் எடுக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரியின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் விரைவில் எதிர்பார்த்த பலனைத் தரும். பண விஷயத்தில் இன்று சிறப்பாக இருக்கும். நீங்கள் கடன் வாங்கியிருந்தால், விரைவில் அதிலிருந்து விடுபடலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் முக்கியமான கூட்டத்திற்கு திடீர் அழைப்பு வரலாம். கடந்த கால கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். இன்று உங்கள் மேலதிகாரி உங்களைப் பற்றிய ஒரு முக்கிய முடிவை எடுக்கலாம். வியாபாரிகளுக்கு இன்று லாபம் கிடைக்கும். இருப்பினும், எந்தவொரு வேலையையும் யோசிக்காமல் செய்யாதீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 2 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், இன்று வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையைப் பெற சாதகமான நாள். வியாபாரிகள் இன்று சில ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்பபது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் திறக்கும். நீங்கள் பதவி உயர்வு பெற வலுவான வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்க, உங்கள் நடத்தையை கவனித்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்களுக்கு ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால், அதில் முழு கவனம் செலுத்தி வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். வியாபாரிகளின் நிதி நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பணம் சம்பந்தப்பட்ட வேலைகளை சிந்தனையுடன் செய்வது நல்லது. குடும்ப வாழ்வில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்பு இன்னும் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மதியம் 2:55 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பண விஷயமாக இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். முக்கியமான முடிவுகளை நன்கு சிந்தித்து எடுங்கள். மற்றவர்கள் உங்களை தவறாக வழிநடத்த அனுமதிக்காதீர்கள். அதிகமாக காபி, டீ உட்கொள்வது உங்கள் உடல்நிலையைப் பாதிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, மாணவர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாகும். கல்வி தொடர்பான உங்கள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வியாபாரிகள் இன்று நல்ல பலன்களைப் பெறலாம். நீங்கள் சமீபத்தில் தொடங்கிய புதிய தொழிலின் விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று மிகவும் சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:15 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உத்தியோகஸ்தர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். உங்கள் வேலையைப் பற்றி உங்கள் மனதில் பலவிதமான கவலைகள் இருக்கும். வியாபாரிகள் இன்று புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். இன்று உங்கள் எதிரிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நீங்கள் ஏதேனும் பெரிய செலவுகளைச் செய்யும் மனநிலையில் இருந்தால், அதைத் தவிர்த்திடவும். குடும்ப வாழ்க்கையில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும். நாளின் பிற்பாதியில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 9:50 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று உங்கள் கட்டுப்பாடற்ற கோபமே உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும். அலுவலகத்தில், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உயர் அதிகாரிகள் இன்று உங்கள் மீது மிகவும் கோபப்படக்கூடும். வியாபாரிகள் கலவையான பலன்களைப் பெறலாம். பெரிய லாபத்திற்காக சில புதிய உத்திகளை கையாள வேண்டும். நாளின் இரண்டாம் பகுதியில், சில பழைய நண்பர்கள் திடீரென்று உங்கள் வீட்டிற்கு வரக்கூடும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 12 மணி வரை



Click it and Unblock the Notifications











