Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் இருவரும் மூன்றாம் உலகப்போர் பற்றி என்ன கணித்துள்ளார்கள் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...! -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
Today Rasi Palan 18 August 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரப்பட்டு பண பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் திருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 18ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு சிறந்த நபரை இன்று சந்திக்கலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 5 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவும். எனவே, எந்த வகையிலும் அலட்சியமாக இருக்காதீர்கள். அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாள்வதைத் தவிர்க்கவும். தொழிலதிபர்கள் இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கை துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்கள் துணையின் அன்பான உபசரிப்பு உங்களைச் சிறப்பாக உணர வைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் காலை 9:00 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த நிதி பரிவர்த்தனை செய்ய வேண்டாம். காதல் விஷயங்களில் இன்று மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். இன்று உங்கள் துணை தனது மனதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அலுவலகத்தில் நீங்கள் மிகவும் சமநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். சிறிய விஷயங்களில் பொறுமையை இழப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். இன்று பூஜை, யாகம் போன்றவற்றை ஏற்பாடு செய்யலாம். மனதளவில் மிகவும் நன்றாக உணர்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் நல்ல செயல்திறனின் அடிப்படையில், உங்கள் நிலையை வலுப்படுத்த முடியும். உங்கள் பெரிய முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வசதி வாய்ப்புகள் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். அவசரத்திலும் கோபத்திலும் எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். வேலையில் உயர் அதிகாரிகளின் அழுத்தம் அதிகரிக்கக்கூடும். உங்களைக் கட்டுப்படுத்தி உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இரவு நீண்ட நேரம் வரை விழித்திருப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்கள் வேலை சுமை குறைந்து, உங்களுக்கென போதுமான நேரம் கிடைக்கும். பண விஷயத்தில் இன்றைய நாள் நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. சேமிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பான நாளாக இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:45 மணி முதல் மதியம் 2 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படலாம். இதற்கு நீங்கள் முன்கூட்டியே தயாராக இருப்பது நல்லது. பொருளாதார நிலை நன்றாக இருக்கும். ஆனால் இன்று வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கக்கூடும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. வேலை தொடர்பான கவலை அதிகரிக்கலாம். உங்களை நம்பினால், விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் காலை 9:50 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பெரிய சண்டை ஏற்படலாம். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் குழந்தைகளிடமும் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே, கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். கல்வி தொடர்பான புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:15 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் புதிய முதலீடு செய்திருந்தால், அதன் இரட்டிப்பு பலன்களைப் பெறலாம். நீங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:30 மணி முதல் காலை 10:10 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பொருளாதார பிரச்சனை தீரும். இன்று நீங்கள் திடீர் பண வரவைப் பெறலாம். நாளின் இரண்டாம் பகுதியில் வேலை நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலின் எந்தப் பகுதியிலும் வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9:05 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார நிலையில் பலம் உண்டாகும். நீங்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் முழு ஆற்றலுடனும் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, எதிர்பார்த்த பலன் கிடைக்கும். குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் இன்று சிறப்பான வெற்றியைப் பெறலாம். உங்கள் பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புள்ளது. மனைவியுடன் உறவில் இனிமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:45 மணி முதல் மாலை 6 மணி வரை



Click it and Unblock the Notifications











