Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
Today Rasi Palan 16 October 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர அவசரமாக முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். அக்டோபர் 16ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 6.15-7.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. ரேவதி, அசுபதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, உணர்ச்சிவசப்பட்டு இன்று எந்தவொரு முடிவையும் எடுக்காதீர்கள். இல்லையெனில் நீங்கள் எதிர்காலத்தில் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனில் மகிழ்ச்சியடையாவிட்டால், உங்களால் முடிந்ததைச் செய்ய கடினமாக உழைக்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். அந்த நேரத்தில், நீங்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 8 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, பணம் தொடர்பான கவலைகள் இன்று அதிகரிக்கலாம். இன்று நீங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடலாம். பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வாக உணரலாம். இதனால், இன்று உங்கள் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். வேலையுடன் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:10 மணி முதல் காலை 10:50 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, தொழில் தொடர்பான எந்தவொரு பெரிய பிரச்சனையும் இன்று தீரும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், இன்று அதை திரும்பப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்வில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக உங்கள் தாயுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைப் புத்திசாலித்தனமாக தீர்க்க முயற்சி செய்யுங்கள். அவசரமாக முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். இன்று அலுவலகத்தில் வேலையில் அதிக கவனம் செலுத்தமுடியாது. உங்களின் முக்கியமான சில வேலைகள் முழுமையடையாமல் போகலாம். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் காலை 11:45 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் வேலைகளில் சில தடைகள் இருக்கலாம். ஆனால், சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் உதவியால் உங்கள் பிரச்சனைகள் தீரும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். இன்று உங்கள் எண்ணங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் இரவு 7:25 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, மாணவர்கள் விரைவில் வரவிருக்கும் தேர்விற்கு கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் கவனக்குறைவு, அழகான எதிர்கால கனவுகளைக் கெடுக்கலாம். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். பெற்றோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். இன்று அலுவலகத்தில் புதிதாக ஒன்றைக் கற்று கொள்ள வாய்ப்பு கிடைக்கும். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் கடன் வாங்கியிருந்தால் அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தம் இன்று உங்கள் மீது அதிகரிக்கலாம். உங்கள் நிதி முடிவுகளை நீங்கள் கவனமாக எடுக்க வேண்டும். வேலையில் இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ம நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:15 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, வணிகர்கள் இன்று பெரிய ஆர்டரைப் பெறலாம். உங்கள் வேலை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் மனதை அறிய முயற்சிக்க வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் குழந்தைகளுக்கு சில முக்கியமான பொருட்களை வாங்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11:20 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கவனக்குறைவாகவே இருக்காதீர்கள். அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பணம் தொடர்பான பரிவர்த்தனைகள் செய்வதற்கு இன்று ஏற்ற நாள் அல்ல. குடும்ப வாழ்க்கையில் மனஅழுத்தம் அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் காலை 7:45 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, நீங்கள் தனிமையில் இருந்தால் உங்கள் காதல் வாழ்க்கை இனிதே தொடங்கலாம். நீங்கள் சிறப்பு வாய்ந்த ஒருவரை சந்திப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நிதிக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளைத் தவிர, சக ஊழியர்களுடனும் நல்ல ஒருங்கிணைப்பைப் பேண முயற்சி செய்யுங்கள். தேவையில்லாத சச்சரவு உங்கள் வேலைக்கு நல்லதல்ல.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:20 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி முடிவடையும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன், எந்தவொரு பெரிய குடும்ப பிரச்சினையையும் தீர்ப்பதில் வெற்றி பெறலாம். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். நீங்கள் பணம் சம்பாதிக்கவும் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, தொழில் ரீதியாக இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். இன்று வேலை நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக அமையும். குடும்ப வாழ்வில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். இன்று சில சுப நிகழ்ச்சிகளை வீட்டில் ஏற்பாடு செய்யலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை



Click it and Unblock the Notifications











