Latest Updates
-
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்...
Today Rasi Palan 15 August 2023: இன்று இந்த ராசிக்காரர்களை சிலர் தவறாக வழிநடத்த முயற்சிக்கலாம்... உஷார்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 15ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சோர்வான நாளாக இருக்கும். தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மௌனம் காப்பது உங்களிடையே தவறான புரிதலை அதிகப்படுத்தும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். உங்களின் சில பெரிய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். இன்று நீங்கள் வேலை விஷயமாக முக்கியமான பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கைத்துணையின் உதவியால் உங்களின் அனைத்துப் பணிகளும் எளிதாக முடிவடையும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:25 மணி முதல் மதியம் 2 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். பணத்தின் அடிப்படையில், இன்று கலவையான நாளாக இருக்கும். மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் உங்கள் நிதி முடிவுகளை எடுக்காதீர்கள். வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்கும். இன்று அவர்களும் உங்களுக்காக விசேஷமாக ஏதாவது செய்ய முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வழக்கத்தை விட சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் முக்கியமான வேலைகள் ஏதேனும் தடைபட்டிருந்தால், உயர் அதிகாரிகளின் உதவியால் இன்று அதை முடிக்க முடியும். வணிகர்களின் எந்தவொரு சட்டப் பிரச்சனையையும் தீர்த்திட முடியும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், செலவுகளை சரியாகக் கண்காணிக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 44
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், இன்று உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். உங்கள் பெரிய கவலை நீங்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில், அவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. உங்களின் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் பலத்தால் அலுவலகத்தில் நல்ல வெற்றியை அடையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்கள் முழு கவனம் உங்கள் இலக்கில் மட்டுமே இருக்க வேண்டும். தேவையற்ற பேச்சுக்களில் இருந்து விலகி இருங்கள். சிலர் தவறான தகவல்களால் உங்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பார்கள். அத்தகையவர்களிடம் கவனமாக இருங்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, நிதி நிலையை கண்காணிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மாலை 4:20 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உங்களுக்கு ஏதேனும் கெட்ட பழக்கங்கள் இருந்தால், அவற்றை விரைவில் அகற்ற முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் அது கடுமையான உடல் நல கோளாறை ஏற்படுத்தலாம். உங்கள் நிதி நிலையை பேண அதிகமாக செலவுகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தேவையற்ற கோபம் மற்றும் ஆணவத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, கடினமாக உழைத்து வெற்றி கிடைக்கவிட்டால், பொறுமையுடன் நேர்மறையாக முயற்சிக்க வேண்டும். விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். காதல் வாழ்க்கையில் உறுதித்தன்மை இருக்கும். உங்கள் துணையுடன் பரஸ்பர ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் எளிதாக பணத்தை சேமிக்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மாலை 3 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் இனிமையான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் உள்ள ஒருவரிடமிருந்து நல்ல செய்தி வரும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். படிப்பை முடித்து நல்ல வேலை தேடிக்கொண்டிருந்தால் இன்று நல்ல சலுகை கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, வீட்டின் சூழல் சரியாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்கள் நடத்தையை சமநிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். பொழுதுபோக்கிற்காக அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சில முக்கியமான பணியை ஒப்படைத்திருந்தால், அதை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். அலட்சியத்தைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 8 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, வேலையில் இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். இன்று, வேலை தொடர்பான பயணங்களும் சாத்தியமாகும். நிதி நிலை வலுவாக இருக்கும். முன்னோர் சொத்துக்களை விற்க திட்டமிட்டிருந்தால், இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று பெரிய பிரச்சனை இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று நன்றாக உணருவீர்கள். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நீங்கள் திருமணமாகாதவர் மற்றும் காதல் திருமணம் செய்ய விரும்பினால், இன்று உங்கள் திருமணத்தைப் பற்றி வீட்டில் விவாதிக்கப்படலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், துரித உணவைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை



Click it and Unblock the Notifications











