Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
Today Rasi Palan 01 August 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளைத் தவிர்த்திடுவது நல்லது...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 01ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று திடீர் நிதி ஆதாயங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் விரும்பிய விலையுயர்ந்த பொருளையும் வாங்கலாம். வேலையின் அடிப்படையில், இன்று மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களுக்கு முன்னேற்றத்தின் கதவுகள் திறக்கப்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று கலக்கமாக போகிறது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். இன்று நீங்கள் உங்கள் துணைக்காக ஏதாவது சிறப்பாக செய்யலாம். ஒருவர் மீது ஒருவர் உணர்வு ரீதியான பற்று அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான எந்தவொரு முக்கிய பிரச்சனையும் தீரும். இன்று நீங்கள் உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியும். மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றி பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:20 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, வேலையைப் பற்றி பேசுகையில் இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நீங்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும் உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்யவும். நாளின் இரண்டாம் பகுதியில் திடீரென்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் உடல்நலம் சீராகும்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்றைய நாள் பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். அதிக செலவு செய்ய வேண்டாம். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். முடிந்தால், இன்று உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். அலுவலகத்தில் சூழ்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மேலதிகாரியின் சில நல்ல ஆலோசனைகளையும் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் காலை 7:25 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, நீங்கள் நீண்ட நாட்களாக உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்றால், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். இன்று பணிச்சுமை குறைய வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு போதுமான நேரத்தைக் கொடுக்க முடியும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். நீங்கள் வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பினால், இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:15 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, குடும்பத்தில் உள்ள ஒருவருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. தவறான வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அலுவலகத்தில் பதற்றத்துடன் எந்த வேலையையும் செய்யாதீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நல்ல ஆரோக்கியத்திற்காக, நீங்கள் தினமும் லேசான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் காலை 11 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், பணம் தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனையையும் தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் நல்ல செயல்பாட்டிற்காக அலுவலகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, பண விஷயத்தில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் நிதி நெருக்கடியால் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் வரலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்கள் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். உடல்நலம் சம்பந்தமான பிரச்சனை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:15 மணி முதல் காலை 9:50 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்றைய நாளின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆனால் நாளின் இரண்டாம் பகுதியில், தடைப்பட்ட வேலையை செய்து முடிப்பதன் மூலம் உங்கள் முக்கிய கவலைகளை நீக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். காதல் வாழ்க்கையில் மனஅழுத்தம் ஏற்படலாம். உங்கள் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் காலை 11:20 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கை துணைக்காக சில நல்ல திட்டங்களை செய்யலாம். ஆனால் சில காரணங்களால் உங்கள் திட்டம் தடைபடும். உங்களுடைய இந்த தவறால் உங்கள் துணை கோபப்பட வாய்ப்புள்ளது. பணத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும். அதிகரிக்கும் பணிச்சுமை உங்களை மிகவும் சோர்வடையச் செய்யும். நீங்களும் உங்கள் மீது கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:55 மணி முதல் இரவு 7:55 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்களுடைய பழைய சொத்தில் ஏதேனும் ஒன்றை விற்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபத் தொகை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பிறர் வேலையில் அதிகம் தலையிடாதீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:05 மணி முதல் காலை 9:05 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் தவறான அணுகுமுறை உங்களிடையே உள்ள விரிசலை அதிகரிக்கச் செய்யும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று வேலை அல்லது வியாபாரம் உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். இருப்பினும், உங்கள் எல்லா வேலைகளையும் உங்கள் திட்டப்படி சரியான நேரத்தில் முடிக்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 7 மணி வரை



Click it and Unblock the Notifications











