Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
வாழ்க்கையில எந்த கஷ்டம் வந்தாலும் எப்போதும் சிரிச்சிக்கிட்டே சந்தோஷமா இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்' என்பது பழமொழி. இன்றைய நவீன உலகில், பெரும்பலான மக்கள் மன நிம்மதியில்லாமல் மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள். எல்லா விஷயங்களையும் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்கள். இதனால், சிரிக்கவே பலர் மறந்துவிடுகிறார்கள்.
நம் எல்லாரிடமும் இருப்பது இந்த ஒரு வாழ்வுதான். அதனால், வாழ்க்கையை மகிழ்ச்சியாக சிரித்து வாழத் தொடங்குங்கள். பிரச்சனைகள், சோதனைகள் எல்லாருடைய வாழ்க்கையில் வரும். ஆனால், அவற்றை நீங்க உங்கள் புன்னகையால் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் நீங்கள் அணியும் உங்கள் அழகான புன்னகை, வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

உங்கள் வாழ்க்கையில் புன்னகையையும் சிரிப்பையும் அப்படியே வைத்திருக்க பயிற்சி செய்வதன் மூலம், நீங்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் மற்றும் நன்றியுணர்வுடன் இருக்க கற்றுக்கொள்கிறீர்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக கடந்து செல்வது என்பது எளிதானது அல்ல. இருப்பினும், உரத்த சிரிப்பின் மூலம் உங்கள் எல்லா பிரச்சனைகளையும் போக்கலாம். ஒவ்வொரு நாளும் நீங்கள் அதிகமாக சிரிக்க உதவும் வழிகளைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
விஷயங்களை இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்
வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளும் ஒரே மாதிரியாக இருக்காது. சில சூழ்நிலைகள் உங்களை அதிகம் சோதித்து பார்க்க முயற்சிக்கும். தேவையில்லாத விஷயங்களை நினைத்து யோசித்து கொண்டிருக்காமல், அவற்றை எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையைப் பற்றி நாம் எவ்வளவு தீவிரமாகப் பேசுகிறோமோ, அவ்வளவு கடினமாக எல்லா சோதனைகளும் இருக்கும்.
வாழ்க்கையை நாம் எவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்கிறமோ, அதேபோல சோதனைகளும் நம்மை விட்டு எளிதில் நீங்கிவிடும். எனவே, தேவையில்லாத மன உளைச்சலைத் தவிர்க்க, நீங்கள் வாழ்க்கையில் விஷயங்களை எளிதாக எடுத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். எந்த கவலையையும் உங்களுக்குள் எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நீங்கள் வாழுங்கள்.
எல்லா விஷயங்களையும் நாம் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளத் தொடங்கினால், எல்லா நேரங்களிலும் நம் தோள்களில் அதிக சுமை இருப்பதை உணருவோம். வாழ்க்கையில் வரும் எல்லா கஷ்டங்களையும் பார்த்து சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். நிச்சயமற்ற சோதனைகளையும் கவலைகளையும் எளிதாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிடுவீர்கள்.
மகிழ்ச்சியை ஒருபோதும் இழக்காதீர்கள்
எல்லா தருணங்களிலும் மகிழ்ச்சியான கூறுகளின் பார்வையை ஒருபோதும் இழக்காதீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சுதந்திரமான விருப்பத்தைப் பயன்படுத்துவதற்கான சக்தியுடன் நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு நொடியிலும் மகிழ்ச்சியை பார்ப்பதும், நமது முட்டாள்தனத்தைப் பார்த்து நாமே சிரிப்பதும், விஷயங்களை நாமே சாதாரணமாக எடுத்துக்கொள்ளவோம்.
நமது கண்ணோட்டத்தில் ஒரு எளிய நேர்மறை மாற்றம் நம் வாழ்வில் அதிசயங்களையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். வாழ்க்கையில் ஒவ்வொரு தீவிரமான தருணத்தையும் மகிழ்ச்சியின் லென்ஸ் மூலம் பார்க்க முடியும். மேலும் மேலும் சிரிக்க பல காரணங்களை நீங்களே காண ஆரம்பிக்கலாம்.
மகிழ்ச்சியைத் தரும் செயல்களில் ஈடுபடுங்கள்
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் மற்றும் உங்களை சிரிக்க வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். தினமும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்ப்பது, தெருக்களில் நடைபயணம் மேற்கொள்வது அல்லது குழந்தைகளோடு விளையாடுவது போன்ற எளிமையான விஷயங்களை முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையை ஈர்க்கும் உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் தொடர்புகொள்வது மிக அவசியம்.
முக்கியமானவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்
முக்கியமான நபர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள். அதனால் சில நல்ல தருணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நாளின் முடிவில், உங்களுக்கு முக்கியமான உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்வில் பாதுகாப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தூண்டுகிறது.
இறுதிக்குறிப்பு
உங்கள் வாழ்க்கையில் விஷயங்களைச் சிறப்பாகப் பெற முயற்சிக்கும்போது, உங்கள் சிரிப்பை ஒருபோதும் குறைய விடாமல் இருக்க மேலே குறிப்பிடுபட்டுள்ள வழிகளைப் பின்பற்ற வேண்டும். இதனால் எல்லா நேரங்களிலும் நீங்கள் அதிக சுறுசுறுப்பை வெளிப்படுத்துவீர்கள். மேலும் மக்கள் இயல்பாகவே உங்களை நோக்கி நேர்மறையாக ஈர்க்கப்படுவார்கள்.
நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கையில் எத்தனை சோதனைகள், கஷ்டங்கள் வந்தாலும், உங்கள் வாழ்க்கையில் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் உயிருடன் வைத்திருப்பதற்கு நீங்களே முயற்சி செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications


