Latest Updates
-
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
12 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு திடீர் பண வரவு கிடைக்கும்...
ரு பகவான், 12 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியில் குரு பயணிக்கும் போது, 3 ராஜயோகங்கள் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளன.
வேத ஜோதிடத்தில், தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியில் குரு பயணிக்கும் போது, 3 ராஜயோகங்கள் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளன. அவை ஹன்ஸ் ராஜயோகம், கஜகேசரி ராஜயோகம் மற்றும் புதாதித்ய ராஜயோகம்.

இந்த மூன்று யோகங்களும் 2023 மார்ச் 22 ஆம் தேதி உருவாகவுள்ளன. இந்த மூன்று ராஜயோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகங்களால் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். அதுவும் வெற்றிகளையும், நல்ல பண வரவையும் பெறவுள்ளார்கள். இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் உருவாகும் 3 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் உருவாகவுள்ள ஹன்ஸ் ராஜயோகத்தால், இந்த ராசிக்காரர்கள் அனைத்துவிதமான சுகங்களையும் பெறுவார்கள். மேலும் ஆடம்பரம் மற்றும் வசதிக்காக நிறைய செலவுகளை செய்யக்கூடும். முக்கியமாக புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். வணிகர்கள் இக்காலத்தில் அபரிமிதமான லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு இக்காலம் பொன்னான காலமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சம்பள உயர்வை பெற வாய்ப்புள்ளது.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் 3 ராஜயோகங்களும் உருவாகின்றன. இதனால் மீன ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட நாட்களாக ஒரு புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதை இந்த யோக காலத்தில் தொடங்கினால் நற்பலன் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆனால் ஏழரை சனி நடப்பதால், எந்த முடிவையும் புத்திசாலித்தனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மார்ச் 22 இல் உருவாகும் ராஜயோகங்களால் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக இந்த யோகங்கள் அதிர்ஷ்ட வீட்டில் உருவாகியிருப்பதால், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் இக்காலத்தில் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
