Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
பாலியல் தொழிலாளர்களை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவந்து வரலாறு படைத்துள்ள நாடு... எந்த நாடு தெரியுமா?
உலகம் தோன்றிய காலம் முதலே இருக்கும் ஒரு தொழில் என்றால் அது பாலியல் தொழில்தான், துரதிர்ஷ்டவசமாக உலகம் அழியும் வரையிலும் கூட இந்த தொழில் தொடரும். இந்தியாவில் இது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும் உலகின் பல நாடுகள் இந்த தொழிலை அங்கீகரித்து அதற்கு வரியும் விதித்து வருகிறது. பாலியல் தொழிலை அங்கீகரிப்பதில் ஒரு நாடு அனைவரையும் மிஞ்சியுள்ளது.
பெல்ஜியம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த சட்டம் உலகிலேயே முதன்முறையாக, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரித்து, மற்ற வேலைகளைப் போலவே அவர்களுக்கும் சமஉரிமை அளித்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ், பாலியல் தொழிலாளர்கள் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள், சுகாதார காப்பீடு, ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு மற்றும் ஆரோக்கிய விடுமுறை போன்ற பலன்களைப் பெறுவார்கள்.

பெல்ஜியம் 2022 இல் பாலியல் தொழிலை குற்றமற்ற தொழிலாக அறிவித்தது. இருப்பினும், பாலியல் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு உரிமைகள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுவும் புதிய சட்டம் உலகளவில் விவாதத்தைத் தொடங்கியுள்ளது. மற்ற தொழில்களைப் போலவே பாலியல் தொழிலாளர்களுக்கும் அதே பாதுகாப்புகளை இந்த சட்டம் உறுதி செய்கிறது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் செயலாளர் கூறுகையில் "இந்த சட்டம் வரவேற்கத்தக்கது, இதுவரை உலகில் எங்கும் நாம் பார்த்திருக்காத சிறந்த படி இது" என்று கூறியுள்ளது. மேலும் "ஒவ்வொரு நாடும் அந்த திசையில் நகர வேண்டும்," என்று அவர் கூறினார். ஜெர்மனி, கிரீஸ், நெதர்லாந்து மற்றும் துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் பாலியல் வேலை சட்டப்பூர்வமாக உள்ளது. இந்த சட்டம் பாலியல் தொழிலார்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெல்ஜியத்தின் இந்த புதிய சட்டம் 2022-ல் கோவிட் தொற்றுநோய்களின் போது பாலியல் தொழிலாளர்களுக்கு அரசு ஆதரவு இல்லாததால் ஏற்பட்ட எதிர்ப்புகளுக்குப் பிறகு முழு வடிவம் பெற்றது. இது டிசம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததுடன், பாலியல் தொழிலாளிகளுக்கு ஒப்பந்தத்தில் வேலை செய்யும் உரிமையை வழங்குகிறது.

புதிய சட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, பெல்ஜிய பாலியல் தொழிலாளர் சங்கத்தின் (UTSOPI) தலைவர் விக்டோரியா கூறுகையில், "சட்டம் இல்லையென்றாலும் மற்றும் உங்கள் வேலை சட்டவிரோதமானது என்றாலும், உங்களுக்கு உதவ எந்த நெறிமுறைகளும் இல்லை. இந்த சட்டம்எங்களுக்கு பாதுகாப்பை வழங்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
12 வருடங்களாக பாலியல் தொழிலில் இருக்கும் விக்டோரியா கூறுகையில், 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் தனது வேலையின் சட்டவிரோதத்தன்மை காரணமாகவும் தான் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு ஆளாகியதாகவும், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் ஏஜென்சி தனது வருவாயில் ஒரு பெரும் பகுதியை எடுத்துக்கொள்வதில் விருப்பம் இல்லை என்று கூறினார்.
இருப்பினும், விமர்சகர்கள் இந்த சட்டம் போதாது என்று நம்புகிறார்கள், ஏனெனில் இது கடத்தல், பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தை தடுக்க முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும் சிலர் "இது ஆபத்தானது, ஏனென்றால் அது எப்போதும் வன்முறையில் இருக்கும் ஒரு தொழிலை இயல்பாக்குகிறது" என்று விமர்சிக்கிறார்கள்.
புதிய சட்டத்தால் கிடைக்கும் உரிமைகள்
பெல்ஜியத்தின் புதிய சட்டத்தின் கீழ், பாலியல் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் வேலை நேரம் மற்றும் ஊதியம் தொடர்பான விதிகளை பின்பற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தத் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இப்போது பாலியல் சேவைகள் நடைபெறும் ஒவ்வொரு அறையிலும் பாலியல் தொழிலாளர்களை அவர்களின் "reference person" இணைக்கும் அலாரம் பட்டன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்படாமல் வாடிக்கையாளர்கள் அல்லது பாலியல் சேவைகளை மறுக்க அவர்களுக்கு உரிமை உண்டு.
பாலியல் தொழிலாளர்களுக்கு அறிவிப்பு அல்லது இழப்பீடு இல்லாமல் ராஜினாமா செய்ய அல்லது அவர்களின் சேவைகளுக்கு நிபந்தனைகளை விதிக்கும் உரிமையையும் சட்டம் வழங்குகிறது. பாலியல் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் பிம்ப்களை சட்டப்பூர்வமாக செயல்பட சட்டம் அனுமதித்தாலும், அவர்கள் கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும். புதிய சட்டத்தின்படி, கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற ஒருவர், பாலியல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கப்படமாட்டார்கள்.



Click it and Unblock the Notifications
