Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
புதன்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க.. அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க..
Wednesday: இந்து பஞ்சாங்கத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு கிரகம் அல்லது கடவுளுடன் தொடர்பு கொண்டுள்ளது. அதனால் தான் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதே சமயம் ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களை செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதன்கிழமை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் குறிப்பிட்ட சில விஷயங்களை செய்தால், அது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது ஜோதிடத்தின் படி புதன்கிழமைகளில் செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்பதைக் காண்போம்.

* வீட்டில் உள்ள பெண்கள் லட்சுமி தேவிக்கு சமமானவர்கள். எனவே புதன்கிழமைகளில் ஆண்கள் வீட்டில் உள்ள அம்மா, தங்கை, மனைவி, குழந்தைகள் போன்றோரை அவமதிக்கக்கூடாது. மேலும் இந்நாளில் பச்சை நிற ஆடைகள் அல்லது வளையல்களை தானம் செய்வது நல்லது.
* புதன்கிழமை மங்களகரமான நாள். இந்நாளில் கடன் வாங்குவதோ அல்லது கொடுப்பதோ மோசமானதாக கருதப்படுகிறது. ஒருவேளை அவ்வாறு வாங்கினால், அது நிதி நிலையில் எவ்வித முன்னேற்றத்தையும் தராது. அதோடு, இந்நாளில் கடன் வாங்கினால், அது நிதி இழப்பிற்கு வழிவகுக்கும். எனவே எக்காரணம் கொண்டும் கடன் வாங்காதீர்கள்.
* புதன்கிழமைகளில் கெட்ட வார்த்தைகளில் மற்றவர்களை திட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது புதன் பகவானை பலவீனமாக்கும். மேலும் இது வாழ்வில் பணப் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
* புதன்கிழமைகளில எந்த முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது நிதி இழப்பை ஏற்படுத்தும். முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்பினால், அதற்கான உகந்த நாள் வெள்ளிக்கிழமை தான். இந்நாளில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
* திருநங்கைகளை புதன்கிழமைகளில் அவமதிக்கக்கூடாது. மாறாக, அவர்களிடம் ஆசியைப் பெறுவது நல்லது. இப்படி ஆசி வாங்கினால், உங்களின் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். முடிந்தால், இந்நாளில் திருநங்கைகளுக்கு ஏதேனும் தானம் செய்யுங்கள்.
* புதன்கிழமைகளில் மேற்கு திசையில் பயணம் மேற்கொள்வது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. எனவ இந்நாளில் மேற்கு திசையை நோக்கிய பயணத்தைத் தவிர்த்திடுங்கள். மேலும் புதன்கிழமை விநாயகருக்கு உரிய நாள் என்பதால், விநாயகரை வழிபடுவது நல்லது.
* திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆயுளை நீட்டிக்க, கருப்பு நிற ஆடைகளை புதன்கிழமைகளில் அணியக்கூடாது. கணவனின் ஆயுள் நீடித்திருக்க வேண்டுமானால், இந்நாளில் பச்சை நிற ஆடைகளை அணியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications