Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
சிவபுராணத்தின் படி இந்த செயல்களை செய்பவர்கள் மரணத்துக்கு பின் நரகத்துக்கு தான் போவாங்களாம்...
Shiv Purana: இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயம் மரணம் ஏற்படும். இந்த மரணத்திற்கு பிறகு ஒருவர் சொர்க்கம், நரகம் என ஏதாவது ஒரு உலகிற்கு செல்வதாக கூறப்படுகிறது. ஒருவர் வாழும் போது எந்த மாதிரி நடந்து கொள்கிறாரோ, அதைப் பொறுத்து தான் சொர்க்கமா, நரகமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. அதில் நல்ல காரியங்களை அல்லது நன்மைகளை செய்பவர்கள் சொர்க்கத்திற்கும், கெடுதல் மற்றும் கெட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் நரகத்திற்கும் செல்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நீங்கள் மரணத்திற்கு பின் சொர்க்கத்திற்கு சென்று இறைவன் அடியை அடைய விரும்பினால், வாழும் போது ஒருசில செயல்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவரது எந்த மாதிரியான செயல்கள் பாவத்திற்கு ஆளாக்கி நரகத்தின் கதவை திறக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? சிவபுராணத்தின் படி, எப்படிப்பட்ட கெட்ட செயல்கள் நரகத்தின் கதவுகளை திறக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

நரகத்திற்கு அழைத்து செல்லும் பாவச் செயல்கள்
இவ்வுலகில் பாவ செயல்களை செய்யும் பாவிகளுக்கு எப்போதுமே நரகம் தான். இந்த உலகில் பல வகையான பாவ செயல்கள் உள்ன. அவையே மரணத்திற்கு பின் ஒருவரை நரகத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இப்போது சிவபுராணத்தின் படி எந்த செயல்களை செய்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்பதைக் காண்போம்.
* பிறர் மனைவி மீது ஆசைப்படுபவர், பிறர் செல்வத்தை பெற நினைப்பவர், பிறரைப் பற்றி தவறாக நினைப்பவர், அநீதிகளை செய்பவர்கள் மரணத்திற்கு பின் நரகத்தையே பரிசாக பெறுவார்கள். இது தவிர பொய் பேசுவது, கடுமையாக மற்றவர்களிடம் நடப்பது, மற்றவரைப் பற்றி கிசுகிசு பேசுவது போன்றவைகளும் பாவ செயல்களாக கருதப்படுகின்றன.
* தனது ஆசிரியரையோ அல்லது பெற்றோரையோ குறை கூறுபவர் சிவபுராணத்தின் படி மிகப்பெரிய பாவிகளாக கருதப்படுகின்றனர். இது தவிர பிராமணர்களுக்கு இடையூறு விளைவிப்பர்களும், சிவநூல்களை அழிப்பவர்களும் பெரிய பாவிகளாக கருதப்படுகின்றனர்.
* வன்முறையில் ஈடுபடுவது, பொய்யான செயல்களை செய்வது, ஒருவரது செல்வத்தை ஏமாற்றி அபகரிப்பது போன்றவை பெரிய பாவங்களாக கருதப்படுகின்றன. இந்த செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரணத்திற்கு பிறகான வாழ்க்கை மிகவும் கொடுமையாக இருக்கும்.
* சிவபெருமானை போற்றி வணங்காதவர்கள் மற்றும் சிவலிங்கத்தை வணங்காதவர்களும் மரணத்திற்கு பின் நரகத்திற்கு சென்று வேதனையான வாழ்க்கையையே வாழ்வார்கள்.
* கொலை செய்வது, மது அருந்துவது, குரு நிலையில் இருப்பவரை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது போன்றவை பெரிய பாவ செயல்களாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நரகம் மட்டுமே சரியான இடமாக இருக்கும்.
* குருவை வணங்காதவர்கள், குருவிற்கு பணிவிடை செய்ய தயங்குபவக்ள், குருவைத் துறப்பவர்கள், குருவை அவமதிப்பவர்கள், திருடுபவர்கள், பிறரின் நம்பிக்கையை கெடுப்பவர்கள் அனைவருமே மரணத்திற்கு பின் நரகத்தில் தான் வாழ்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
