Latest Updates
-
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்!
இந்த இந்திய அரசர் சீனா வரை தனது ஆட்சியை பரப்பினாராம்... இவர் நீங்க நினைக்கிறவர் இல்ல... இவர் யார் தெரியுமா?
இந்திய வரலாறு என்று வரும்போது அதில் பெரும்பாலும் இந்தியா மீது நடந்த படையெடுப்புகளை பற்றித்தான் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் நம்முடைய மன்னர்களின் வீரம் பற்றியும், அவர்கள் மற்ற நாடுகளின் மீது நடத்திய படையெடுப்புகள் பற்றியும் துரதிர்ஷ்டவசமாக அதிகம் குறிப்பிடப்படவில்லை.
அந்த வகையில் பல அந்நிய படையெடுப்புகளை தடுத்து நிறுத்திய, இந்தியாவின் அலெக்ஸாண்டர் குறிப்பிடப்படும் ஒரு மன்னர் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்தான் காஷ்மீரின் கர்கோடா வம்சத்தைச் சேர்ந்த லலிதாதித்ய முக்தாபிதா.

இந்த இந்திய அரசர் தனது ஆட்சி காலம் முழுவதும் தோல்வியே சந்திக்கவில்லை, மேலும் அனைத்து திசைகளிலும் தனது பேரரசை விரிவுபடுத்தினார். இந்திய வரலாற்றில் தோற்கடிக்கப்படாத அரசர்கள் மிகக் குறைவு, அவர்களில் இவரும் ஒருவர்.
கர்கோடா வம்சத்தின் தொடக்கம்
காஷ்மீரின் கர்கோட்டாவின் வம்சத்தின் எழுச்சி இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த சக்திவாய்ந்த வம்சம் துர்லப-வர்தனனால் நிறுவப்பட்டது. சீன குறிப்புகளின் கூற்றுப்படி, துர்லபா-வர்தன ஆட்சியின் போது ஹியூன் சாங் காஷ்மீர் தக்ஷசிலா, சிம்ஹாபுரா, உராசா, பஞ்ச் மற்றும் ரஜோரி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அதாவது வடமேற்கு பஞ்சாபை அவர் ஆண்டார்.
லலிதாதித்யா கிபி 724 இல் அரியணை ஏறினார் மற்றும் கார்கோட்டா வம்சத்தின் ஐந்தாவது ஆட்சியாளராக இருந்தார். அவர் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த அதிக ஆசை கொண்டிருந்தார் மற்றும் அண்டை நாடுகளை கைப்பற்ற விரும்பினார்.
அவர் யசோவர்மனுடன் கூட்டணி அமைத்து திபெத்தியர்களை தோற்கடித்ததாகக் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த திபெத்தியர்களுக்கு எதிரான அவரது பணிகளை சீனப் பேரரசர்களும் ஏற்றுக்கொண்டனர். சீனப் பேரரசர் இந்த நடவடிக்கையைப் பாராட்டினார் மற்றும் அவரை ஒரு விசுவாசமான கூட்டாளியாக அங்கீகரித்தார்.
அவரது வெற்றிகள் இந்தியாவிற்கு அப்பாலும் பரவியது. லலிதாதித்யா காபூல் வழியாக துர்கெஸ்தான் மீது படையெடுத்து, மகாராஷ்டிரா, பல்லவ பேரரசு மற்றும் கலிங்கம் உள்ளிட்ட இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கில் உள்ள பகுதிகளை கைப்பற்றினார். அவர் மத்திய சீனா வரை தனது ராஜ்ஜியத்தை பரப்பினார். அவரது ஆட்சியின் கீழ், காஷ்மீர் அபரிமிதமான செல்வத்தையும் வளர்ச்சியையும் கண்டது, இதன்மூலம் கோவில்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.
லலிதாதித்யா தனது பேரரசையும் அதன் மக்களையும் படையெடுப்பாளர்களிடமிருந்து திறம்பட பாதுகாத்தார். அவர் கம்போஜஸ், துருக்கியர்கள் மற்றும் டார்ட்ஸ் போன்ற பல மலை பழங்குடியினர்களின் படையெடுப்பை தடுத்து நிறுத்தினார்.

லலிதாதித்யாவின் வெற்றிகள்
காஷ்மீர் அரசர் தங்கள் கண்ணில் பட்ட அனைத்து ராஜ்ஜியங்களையும் வெற்றி கொள்ள ஆசைப்பட்டார். வரலாற்று குறிப்புகளின் படி, அவர் கிழக்கு இந்தியாவின் கலிங்க கடல் கடற்கரை வரை அதிகாரம் செலுத்தினார். அவரின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்ட முதல் அரசர் வங்காளத்தை சேர்ந்த கவுர் என்று கூறப்படுகிறது, மேலும் அவர் பல யானைகளை காஷ்மீர் மன்னருக்கு பரிசாக அனுப்பினார். அதனைத் தொடர்ந்து லலிதாதித்யா காவேரியைக் கடந்து சில தீவுகளைக் கைப்பற்றினார். அங்கிருந்து மேற்கு நோக்கிச் சென்று அவந்தியை வென்றார்.
அவரது ஆட்சியின் போது, லலிதாதித்யா கம்போஜாக்கள், துருக்கியர்கள், திபெத்தியர்கள், தர்தாக்கள் மற்றும் அரேபியர்களை தோற்கடித்தார். மேலும் லலிதாதித்யா தனது இராணுவத்தில் பல சீனக் கூலிப்படைகளை நியமித்ததாக சில குறிப்புகள் கூறுகிறது.
அரேபியர்களுக்கு எதிரான போர்
அவரது ஆட்சியின் போது, இந்தியாவின் வடமேற்கு எல்லை அரேபியர்களால் அச்சுறுத்தப்பட்டது. அவர்கள் மூர்க்கமான போர்வீரர்களாக இருந்தார்கள், அவர்கள் இப்போது மத்திய கிழக்கு, வட ஆபிரிக்காவை தங்கள் ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அரேபியர்களின் முன்னேற்றத்தை அவர் தைரியமாக தடுத்து நிறுத்தினார். அவர் தனது ஆட்சிக்காலத்தில் அரேபியர்களை நான்கு முறை தோற்கடித்ததாக நம்பப்படுகிறது. தற்கால சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் டர்ஃபான், குச்சான் போன்ற இடங்களை கைப்பற்றியதற்கு அவரின் திறமையான தலைமையே காரணம்.
மார்த்தாண்ட சூரியக் கோவில்
சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மார்த்தாண்ட சூரியன் கோயில், 8-ஆம் நூற்றாண்டில் லலிதாதித்யாவால் கட்டப்பட்டது. பின்னாளில் இது சிக்கந்தர் ஷா மிரியால் அழிக்கப்பட்டாலும், அதன் இடிபாடுகள் காந்தரன், குப்தா மற்றும் சீன கட்டிடக்கலை பாணிகளின் கலவைக்கு அடையாளமாக இப்போதும் நிலைத்து நிற்கின்றன. அனந்த்நாக்கிலிருந்து ஐந்து மைல் தொலைவில் அமைந்துள்ள இது இப்போது பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக உள்ளது.



Click it and Unblock the Notifications
