Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 40-க்கும் அதிகமான உணவுகள் அடங்கிய உணவு மற்றும் இசை திருவிழா!
Made of Chennai Food and Music Festival: பொதுவாக வார இறுதி நாட்கள் வந்தாலே, அந்த வாரத்தை எப்படி அதிக செலவு செய்யாமல் சந்தோஷமாக கழிப்பது என்று யோசிப்போம். அந்த வகையில் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் சென்னைவாசிகள் தங்களின் வார இறுதியை சிறப்பாக கழித்தார்கள் என்றே கூறலாம்.
ஏனெனில் இந்நாட்களில் சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் தி இந்து நடத்திய மேட் ஆஃப் சென்னை உணவு மற்றும் இசை திருவிழா நடைபெற்றது. இந்த விழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருவிழாவில் பல்வேறு வகையான உணவுகளோடு, இசை கச்சேரிகளும் நடைபெற்றன. இந்த உணவு மற்றும் இசை திருவிழாவின் முக்கிய அம்சம், இதற்கு நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. பதிவு செய்து கொண்டால் இலவசமாக கலந்து கொள்ளலாம். இதனால் இந்த திருவிழாவிற்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முக்கியமாக இந்த திருவிழாவில் சென்னையின் மிகவும் பிரபலமான 40-க்கும் அதிகமான உணவுகள் இடம் பெற்றிருந்தன. அதுவும் சென்னையின் மிகவும் பிரபலமான தெரு உணவுகளான பானி பூரி, பேல் பூரி, தஹி பூரி மட்டுமின்றி, குச்சி ஐஸ், சாக்லேட்டுகள், குக்கீஸ், மன்னடி நோன்பு கஞ்சி, பாதாம் பால், அப்துல் பாய்-ன் பாயா பிரியாணி, மன்னடி தமீம்-ன் சிக்கன் ஐட்டம்கள், ப்ளேவர்ஸ் ஆஃப் நர்கிஸ்-ன் பிரியாணி மற்றும் பிற விருப்பமான உணவுகளும் இடம் பெற்றிருந்தன.
அதோடு சிதம்பரம் நியூ மூர்த்தி கஃபேயின் பிரபல உணவுகளும் இருந்தன. முக்கியமாக இந்த கஃபேயின் ஸ்பெஷலே நூல் பரோட்டாவும், ஸ்பெஷல் சால்னாவும் தான். இந்த சால்னாவை சுவைத்த போது, அது அவ்வளவு பிரமாதமாக இருந்தது.
இந்த சால்னாவில் அப்படி என்ன சிறப்பு உள்ளது என்று அந்த கஃபேயின் உரிமையாளர் ராஜேஷ் அவர்களிடம் கேட்டபோது, "இந்த சால்னாவில் 38 பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதோடு, இந்த சால்னா செய்வதற்கு 3 மணிநேரம் ஆகும். இதனால் இந்த சால்னா நன்கு க்ரீமியாகவும், ரிச் ப்ளேவருடனும், ஒருவித திருப்தியை தரும் வகையில் இருக்கும்" என்றும் கூறினார்.
இப்படியொருபுறம் இருக்க, மற்றொரு புறம் முதல் நாளில் கானா பாலசந்தர், அந்தோணி தாசன் மற்றும் பிரதீப் குமார் ஆகியோரின் இசை கச்சேரிகளும், இரண்டாம் நாளில் சென்னை ஹிப் ஹாப் செட் - ஆல் ஃபார் ஒன் டான்ஸ் க்ரூ, பால் ஜேக்கப் மற்றும் ஃபங்கிபோதி ஃபோர்ட் சின்னா பொன்னு, ஊர்கா, தாய்க்குடம் பிரிட்ஜ் ஆகியோரின் இசை கச்சேரிகளும் நடந்தன.
மொத்தத்தில் மேட் ஆஃப் சென்னை உணவு மற்றும் இசை திருவிழா சென்னைவாசிகளுக்கு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரு சிறந்த வார இறுதி பொழுதுபோக்காக இருந்ததோடு, புத்துணர்ச்சியையும் அளித்தது என்றே கூறலாம்.



Click it and Unblock the Notifications




