Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
2 லட்சம் கோடி மதிப்புள்ள இந்த கம்பெனியில் வெறும் 30 பேர்தான் வேலை செய்றாங்களாம்... எந்த கம்பெனி தெரியுமா?
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகை நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மாற்றியுள்ளது. தற்போது சிறு நிறுவனங்கள் கூட 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் வியாபாரத்தை நடத்தி வரும்போது 2 லட்சம் கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனம் வெறும் 30 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அதிலும் அந்த நிறுவனத்தில் ஒரு HR கூட இல்லை.
நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது உண்மைதான். அந்த நிறுவனம்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் தினமும் உபயோகிக்கும் டெலிகிராம்(Telegram). அதன் நிறுவனம் துரோவ், முன்பு ஒரு நேர்காணலில், 'ஒரே தயாரிப்பு மேலாளராக' இருந்து தனது நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் தலைமை தாங்குவதாக வெளிப்படுத்தியிருந்தார். போட்டிகள் மூலம் சிறந்த பொறியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை உள்ளடக்கிய மனிதவளப் பொறுப்புகளையும் அவர் பொறுப்பேற்கிறார்.

சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படும் பிரபல தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்கா, 2013 ஆம் ஆண்டு துரோவ் நிறுவிய பிரபல செயலியான டெலிகிராமின் செயல்பாடுகளின் செயல்திறனை வலியுறுத்தி X இல் ஒரு வீடியோவை முன்னதாக வெளியிட்டிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அதன் நிறுவனர் பிரான்ஸில் கைது செய்யப்பட்ட பிறகு அவரது நேர்காணல் வீடியோக்கள் பல இணையத்தில் பரவி வருகிறது. அவரது செயலியில் பல சட்ட விரோத செய்திகள் பரிமாறப்பட்டதாகவும், குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவரைப் பற்றிய பதிவில் துரோவ் வழிநடத்தும் டெலிகிராம் சுமார் 1 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். சுமார் $30 பில்லியன் சந்தை மூலதனம் மற்றும் விளம்பரங்கள் இல்லாமல், நிறுவனத்தில் 30 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர், HR துறையும் இல்லை. துரோவ் எல்லாவற்றையும் தானே நிர்வகிக்கிறார் என்றும், தலைமை நிர்வாக அதிகாரி போட்டிகள் மூலம் 'சிறந்த பொறியாளர்களை' நியமிக்கிறார் என்றும் அதில் கூறப்பட்டது.
HR இல்லை
பில்லியனர் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு மனிதவளம் இல்லாமல் நிறுவனத்தை எவ்வாறு நடத்துகிறார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார். தனது நிறுவனம் யாருக்கும் பங்கு, உரிமைக்கோரல் அல்லது வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை என்று துரோவ் கூறுகிறார். "நாங்கள் செயல்திறனில் நம்பிக்கை கொண்டுள்ளோம்," என்கிறார் துரோவ்.
"நிறுவனத்தின் வளர்ச்சியில் இவ்வளவு காலமாக நானே ஒரே உரிமையாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பு மேலாளராக இருந்ததால், நாங்கள் வேகமாகவும் திறமையாகவும் செயல்பட முடிந்தது," என்று அவர் நேர்காணலில் கூறியிருந்தார்.
நிறுவனத்தில் துரோவ் மட்டுமே தயாரிப்பு மேலாளராக இருக்கிறாரா என்று கோல்சன் கேள்வி எழுப்பியபோது, டெலிகிராம் முதலாளி அதற்கு "ஆம்" என்று பதிலளித்தார். "இந்த அம்சங்களை செயல்படுத்தும் ஒவ்வொரு பொறியாளருடனும், ஒவ்வொரு வடிவமைப்பாளருடனும் நாங்கள் இன்னும் நேரடியாக வேலை செய்கிறோம். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கான வழி இதுதான் என்று நான் நினைப்பதால் நான் மட்டுமே தயாரிப்பு மேலாளராக இருக்கிறேன்..." என்று அவர் கூறினார்.
எப்படி ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள்?
"உங்கள் HR Department எவ்வளவு பெரியது?" என்று கேட்கப்பட்ட போது, துரோவ், "பூஜ்ஜியம்" என்று பதிலளித்தார். டெலிகிராம் ஒரு தளத்தை (contest dot com) நடத்துகிறது, அங்கு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பொறியாளர்களுக்கான போட்டிகளை நடத்துகிறது.
"நாங்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகளின் விளைவாக சிறந்த பொறியாளர்களில் சிறந்தவர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம். இந்த போட்டிகள் மாதக்கணக்கில் நடத்தப்படும். எனவே, தொடர்ச்சியான போட்டிகளுக்குப் பிறகு, சிறந்தவர்களில் சிறந்தவர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம், பின்னர் அவர்கள் சுமார் 30 பொறியாளர்களைக் கொண்ட எங்கள் அணியில் சேரக்கூடும்," என்று துரோவ் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
