Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
ஆசிரியர் தினத்தில் உங்க டீச்சருக்கு புதுவிதமாக என்ன மாதிரியான கிஃப்ட் கொடுக்கலாம் தெரியுமா?
Teacher's Day 2023 Gift Ideas: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை கொடுத்து மகிழ்வர்.
வழக்கமாக ஆசிரியர்களுக்கு கொடுக்கும் பரிசுப் பொருட்கள் என்றால் அது பேனா, புத்தகம், நோட்டு புத்தகம், ஆசிரியர் தின வாழ்த்து அட்டைகள் அப்படித்தான் இருக்கும்.

ஆனால் இந்த ஆசிரியர் தினத்தை நீங்கள் இப்படி வழக்கம் போல் கொண்டாடுவதற்கு பதிலாக மிகவும் ஸ்பெஷலாக கொண்டாட நாங்கள் சில ஐடியாக்களை இங்கே வழங்குகிறோம்.
இந்த வருட ஆசிரியர் தினத்தில் உங்கள் ஆசிரியருக்கு வித்தியாசமான பரிசுகளை வழங்கி மகிழுங்கள். உங்கள் ஆசிரியருக்கு உதவக்கூடிய வகையில் நிறைய பரிசுப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
கேண்டி பார் ஆசிரியர் கிஃப்ட்
ஆசிரியர்களுக்கு பல சாக்லேட்டுகள் நிரம்பிய பெட்டியை நீங்கள் பரிசாக வழங்கலாம். சாக்லேட் பெட்டிகள் அடங்கிய கிஃப்ட்டை நீங்கள் பரிசுப் பொருளாக கொடுக்கலாம். இந்த கேண்டி பார் ஆசிரியர் கிஃப்ட் ஆசிரியர்களுக்கு சிறந்த கிஃப்ட்டாக இருக்கும்.
கலர்ஃபுல் மார்க்கர் பென்
ஆசிரியர்கள் அதிகமாக மார்க்கர் பயன்படுத்துவது உண்டு. எனவே உங்களுக்கு விருப்பமான ஆசிரியர்களுக்கு கலர்ஃபுல் மார்க்கர் பென்களை பரிசளிக்கலாம்.
ஆசிரியரை பாராட்டி பரிசுகள்
உங்கள் டீச்சரை பாராட்டும் விதத்துடன் சிறந்த வாசகத்துடன் ஒரு கிஃப்ட்டை நீங்கள் பரிசளிக்கலாம். இந்த பரிசு உங்கள் டீச்சரை பெருமிதப்படுத்தும் விதத்தில் இருக்கும்.
பூங்கொத்து
உங்கள் ஆசிரியருக்கு பூங்கொத்து பிடிக்கும் என்றால் அழகிய பூங்கொத்து ஒன்றை நீங்கள் பரிசளிக்கலாம். இந்த அழகிய பூங்கொத்து உங்கள் ஆட்சியரை சிறப்பாக உணரச் செய்யும். உங்க ஆசிரியரை பாராட்டும் விதத்தில் எளிய வாசங்களையும் எழுதி பரிசளிக்கலாம்.
அழகிய விளக்கை பரிசளியுங்கள்
ஆசிரியர்கள் அறிவுச் சுடரை ஏற்றி வைக்கும் சக்தி போன்றவர்கள். அவர்கள் என்றும் அணையா விளக்கை போல செயல்படுபவர்கள். எனவே உங்கள் ஆசிரியருக்கு ஒரு அழகிய விளக்கை பரிசாக வழங்கலாம்.
பிளானர் நோட்டு புத்தகம்
உங்கள் ஆசிரியருக்கு சிறந்த குறிப்பேடு தேவை என்றால் ஒரு பிளானர் நோட்டு புத்தகத்தை நீங்கள் பரிசளிக்கலாம். இந்த பிளானர் நோட்டு புத்தகத்தின் மூலம் அவர்கள் தங்களுக்கு தேவைப்படும் குறிப்புகளை குறித்துக் கொள்வார்கள்.
வாழ்த்து அட்டை பூங்கொத்து
நிறைய வாழ்த்து அட்டைகளை ஒன்றாக சேர்த்து ஒரு பூந்தொட்டியில் வைத்து பரிசளிக்கலாம். இந்த வாழ்த்து அட்டைகளில் உங்களுக்கு பிடித்த வாசகங்களை எழுதி கொடுங்கள். இது ஒரு சிறந்த பரிசுப் பொருளாக அமையும்.
குக்கீஸ் பேக்
உங்கள் ஆசிரியருக்கு விருப்பமான குக்கீஸ் பேக்குகளை வாங்கி அலங்காரம் செய்து பரிசளிக்கலாம். குக்கீஸ் பேக்குகள் உங்களுக்கு சிறந்த சுவையை வழங்கக் கூடியது.
பெயர் எழுதப்பட்ட காபி கப்கள்
உங்கள் ஆசிரியரின் பெயர் பொரிக்கப்பட்ட காபி கப்களை பரிசாக வழங்கலாம். காபி விரும்பியர்களுக்கு இது ஒரு சிறந்த கிஃப்ட்டாக இருக்கும்.
பட்டன் கார்டு மூலம் நன்றி சொல்லுதல்
கலர்ஃபுல்லான பட்டன்களை வைத்து அலங்கரித்து அந்த கார்டை உங்க ஆசிரியருக்கு வழங்கலாம். இந்த பட்டன் கார்டு ஒரு அழகான ஞாபகார்த்தமான பரிசாக இருக்கும்.
கலர்பென்சில் வளையம்
வித விதமான கலர் பென்சிலைக் கொண்டு ஒரு வளையம் போல் அலங்கரித்து, அதில் ரிப்பன் மற்றும் ஸ்டிக்கர்கள் கொண்டு அலங்கரித்து பரிசளிக்கலாம். இந்த கலர் பென்சில் வளையம் உங்கள் ஆசிரியருக்கு மறக்க முடியாத பரிசாக இருக்கும்.
ஆசிரியர் பெயர் பொரிக்கப்பட்ட பேக்
ஆசிரியர்கள் பொதுவாக அவர்கள் தேவைக்கு பேக்குகளை பயன்படுத்துவது உண்டு. எனவே உங்கள் ஆசிரியருக்கு உதவும் வகையில் ஒரு கிஃப்ட் பரிசளிக்க நினைத்தால் ஆசிரியர் பெயர் பொரிக்கப்பட்ட பேக்கை அவருக்கு பரிசாக வழங்கலாம்.
கையால் செய்யப்பட்ட கலர் பென்சில் மோனோகிராம்
உங்கள் ஆசிரியருக்கு கலர் கலரான பென்சிலைக் கொண்டு அவர்களின் பெயரின் முதல் எழுத்தை வடிவமைத்து அதை பரிசாக வழங்கலாம்.
டீச்சர் சைன் போர்டு
உங்கள் ஆசிரியரின் பெயர் பொரிக்கப்பட்ட ஒரு சைன் போர்டை அலங்கரித்து அதை அவருக்கு பரிசாக வழங்கலாம். இந்த சைன் போர்டு வீட்டிற்கு வெளியே அழகாக மாட்டி வைக்க உதவும்.



Click it and Unblock the Notifications