Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
Teacher's day 2024: ஆசிரியர் தினம் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரியுமா?
Teacher's day 2024: நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்கு மிகப் பெரியது. ஆசிரியர்கள் மாணவர்களின் தவறுகளை சரி செய்து அவர்களின் வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு செல்வார்கள். அதனால்தான் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஒதுக்கப்படுகிறது. இது ஆசிரியர் தினம் ஆகும் . இது உலகின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆசிரியர்களின் பணி மற்றும் முக்கியத்துவத்திற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினம் எப்போது தொடங்கியது மற்றும் இந்த நாளின் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

ஆசிரியர் தினம் ஏன் செப்டம்பர் 5 கொண்டாடப்படுகிறது?
1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும் இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் . அவரது பிறந்தநாளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தின வரலாறு
இந்தியாவில் ஆசிரியர் தினம் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைதான் கொண்டாடுகிறோம்.. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஒரு சிறந்த அறிஞரும் ஆசிரியரும் ஆவார் . ஒரு அரசியல்வாதி மற்றும் மதிப்புமிக்க பாரத ரத்னா விருது பெற்றவர் . ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாட அனைத்து மாணவர்களும் தயாராகிவிட்டதால், ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் மற்றும் ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறுகையில், எனது பிறந்தநாளுக்கு பதிலாக செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும் . அந்த நாளே ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் முதல் ஆசிரியர் தினம் செப்டம்பர் 5, 1962 அன்று கொண்டாடப்பட்டது. மேலும், அதே ஆண்டில் ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். 1962 முதல் 1967 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்குப் பிறகு இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் ஆவார். 1965 இல், அவரது மாணவர்களும் நண்பர்களும் அவரது பிறந்தநாளைக் கொண்டாட அவரை அணுகினர். தனது பிறந்தநாளை கொண்டாடாமல், அனைத்து ஆசிரியர்களையும் கவுரவிக்கும் வகையில் ஆசிரியர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்..
இந்தியாவில் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம்
ஒரு ஆசிரியர் ஒரு தத்துவஞானி மற்றும் வழிகாட்டியாக நம் கைகளைப் பிடித்து, நம் தவறுகளைத் திருத்தி, நம்மை சிறந்த குடிமக்களாக மாற்றுகிறார். வாழ்க்கையில் ஆசிரியரின் பங்களிப்பு விலை மதிப்பற்றது. உலகின் பல நாடுகளில், ஆசிரியர் தினம் என்பது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களை கௌரவிக்கும் ஒரு சிறப்பு நாளாகும். இந்தியாவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
அன்பான ஆசிரியருக்கு சிறப்பு உணர்வை ஏற்படுத்த சிறப்பு நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் விரிவான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பூக்கள், இனிப்புகள், சாக்லேட்கள் மற்றும் பிற பரிசு பொருட்களையும் வழங்குகிறார்கள்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றி தெரியுமா?
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 5, 1882 அன்று தமிழ்நாட்டின் திருத்தணியில் ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார். மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவம் பயின்றார். பின்னர் மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். அவரது சிறப்பான பணியின் காரணமாக ஆந்திரா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அவர் தனது வாழ்நாளில் பல விருதுகளையும் சாதனைகளையும் வென்றார்.
கொண்டாட்டம்
ஆசிரியர் தினம் அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் pஅலவிதமான கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளனர்.. அத்துடன்பல பரிசுகளையும் கொடுக்க உள்ளனர்.. அனறைய தினம் இந்தியாவில் ஆசிரியர்கள் முழுக்க முழுக்க பாராட்டப்படுகிறார்கள்.. ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களை கொண்டாடுவோம்.. அவர்களின் முழு ஆதரவையும் பெருவோம்..



Click it and Unblock the Notifications