Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்!
Taste Of Tamilnadu: நவீன பொங்கல் பாரம்பரியத்தை பகிர்ந்து கொண்ட பிரபல தமிழ் இன்ஃப்ளூயன்சர் ஹேமா காயத்ரி!
Taste Of Tamil Nadu: 2026 ஆம் ஆண்டு சூரியனின் ஆதிக்கத்துடன் மிகவும் பிரகாசமாகத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் ஜனவரி மாதம், மிக முக்கியமான அறுவடைத் திருவிழாக் காலத்தைக் குறிக்கிறது. ஏனெனில் இம்மாதத்தில் சூரியன் வடக்கில் பயணிக்க தொடங்கும். இது சங்கராந்தி என்ற பெயரில் ஒரு பண்டிகையாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக இது நாடு முழுவதும் பல்வேறு பெயர்கள், பாரம்பரியங்களுடன் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை வெறும் பருவகால மாற்றம் மட்டுமல்ல, வாழ்க்கை, உணவு, செழிப்பின் கொண்டாட்டமாகும்.
வடஇந்தியாவில் இந்த அறுவடை திருவிழா லோரி/லோஹ்ரி என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. அதுவும் இது பஞ்சாப் மாநிலத்தில் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான அறுவடை திருவிழாவாகும். குஜராத், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் உத்ராயணம் என்ற பெயரில் வானத்தை நிரப்பும் வண்ணமயமான பட்டங்களுடன் சங்கராந்தி கொண்டாடப்படுகின்றன. இது குளிர்காலத்தின் முடிவையும், கோடைகாலத்தின் தொடக்கத்தையும், அறுவடை காலத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது. கர்நாடகா, ஆந்திராவில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

தென் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், இந்த அறுவடைத் திருவிழா பொங்கல் என்ற பெயரில் ஆழமான கலாச்சார வடிவம் பெறுகிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, மனிதன் உயிர் வாழ விவசாயம் செய்ய தொடங்கிய போது உதவியாக இருந்த சூரிய பகவான், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஆகவே இது நன்றி, எளிமை, ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் ஓர் உணர்வுபூர்வமான கொண்டாட்டம்.
பொங்கல்: நன்றி தெரிவிக்கும் பண்டிகை
பொங்கல் என்ற சொல்லுக்கு 'பொங்கி வழிதல்' என்று பொருள். இது செழிப்பையும், வளமையையும் குறிக்கிறது. தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, விவசாய வாழ்வுடன் ஆழமான பிணைப்பை எடுத்துக்காட்டுகிறது.
இந்த பொங்கல் பண்டிகை போகிப் பொங்கலுடன் தொடங்குகிறது. இந்நாளில் மக்கள் பழைய பொருட்களை நீக்கி, புதிய ஆற்றலை வரவேற்கின்றனர். இதைத் தொடர்ந்து வரும் தைப் பொங்கல், சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். இப்பண்டிகையை முன்னிட்டு, இந்நாளில் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து வண்ணமயமான அழகான பொங்கல் கோலங்களைப் போட்டு, வாசலில் மாவிலை தோரணங்களை கட்டி, வீட்டை அழகாக மலர்களால் அலங்கரிப்பார்கள்.
தை பொங்கலின் முக்கிய சிறப்பே திறந்தவெளியில் சூரியனை நோக்கி மண்பானையில் பொங்கல் வைப்பது தான். அதுவும் பச்சரிசி மற்றும் பால் கொண்டு பொங்கல் தயாரிக்கும் போது, பொங்கல் பொங்கும் வேளையில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து 'பொங்கலோ பொங்கல்!' என்று மகிழ்ச்சியுடன் முழங்குவார்கள். இந்த ஒலியானது வீடு முழுவதும் பரவி சந்தோஷத்தை விதைக்கிறது.
பின்பு சமைத்த பொங்கலை, கரும்பு, பழங்கள், பூக்கள் மற்றும் நாட்டு காய்கறிகளுடன் சூரிய பகவானுக்கு அர்ப்பணித்து வழிபாடு செய்வார்கள். முக்கியமாக சமைத்த பொங்கலை வாழை இலைகளில் பரிமாறுவது, தமிழ்நாட்டின் செழுமையான சமையல் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. இவை எளிமையானவை, சத்தானவை, மேலும் உணர்வுகளுடன் கலந்தவை.
தமிழ்நாட்டின் சுவை
இந்த பாரம்பரியத்தை கொண்டாடும் விதமாக, தமிழ் போல்ட்ஸ்கை 'தமிழ்நாட்டின் சுவை' (Taste Of Tamil Nadu) என்ற சிறப்பு தொடரை தொடரை தொடங்கியுள்ளது. இந்த தொடர் கலாச்சாரமும் சமையலும் ஒன்றிணைந்த தமிழ் மண்ணிலிருந்து உண்மையான கதைகளைத் தருகிறது. இது மாநிலத்தின் வாழ்வியலை ஆராய்கிறது.
இத்தொடரில் சமையல், சடங்குகளைத் தாண்டி, இன்றைய தமிழ்நாட்டு மக்களால் உணவு, பண்டிகைகள், பாரம்பரியங்கள் எவ்வாறு கடைப்பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன என்பது வேரூன்றிய தமிழ் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் குரல்கள் வழியாக இடம் பெறவுள்ளன.
தமிழ் இன்ஃப்ளூயன்சர் ஹேமா காயத்ரி
பிரபல தமிழ் இன்ஃப்ளூயன்சர் ஹேமா காயத்ரி இத்தொடரின் முதல் கதையில் இடம் பெறுகிறார். உண்மையான கதை சொல்லும் பாணி, கலாச்சாரத் தொடர்பிற்காகப் பாராட்டப்படும் ஹேமா, பாரம்பரியத் தமிழ் பழக்கவழக்கங்களை எளிமையாக மற்றும் நவீன முறையில் காட்சிப்படுத்தி இளைய தலைமுறைக்கும் தமிழ் பாரம்பரியத்தை எளிதாக்குகிறார்.
ஹேமா தனது பொங்கல் சடங்குகள் மற்றும் குடும்பப் பாரம்பரியங்களைப் பகிர்வதன் மூலம், இக்காலக் குடும்பங்களில் பொங்கல் பண்டிகை எவ்வாறு செழித்து வளர்கிறது என்பதைக் காட்டுகிறார். அவர் பகிர்ந்த கதை பொங்கலின் சாராம்சமான நன்றி, எளிமை, மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கிறது. கலாச்சாரம் வாழப்படும் போதே, சிறப்பாகப் பாதுகாக்கப்படும் என்பது அவரது கொண்டாட்டங்கள் உணர்த்தும் செய்தி.
இந்தியா முழுவதும் அறுவடை காலம் வெவ்வேறாகக் கொண்டாடப்பட்டாலும், இயற்கைக்கு, குறிப்பாக சூரியனுக்கு நன்றி செலுத்தும் எண்ணம் பொதுவானதாக இருக்கிறது. பொங்கல் இந்த உணர்வைப் படம்பிடித்துக் காட்டுகிறது. நம்மை நிலைநிறுத்தும் சக்திகளுக்கு நன்றி தெரிவிக்க, சிறிது நேரம் ஒதுக்கிச் சிந்திக்க இது நமக்கு நினைவூட்டுகிறது.
'தமிழ்நாட்டின் சுவை' தொடரின் மூலம், பொங்கலை வெறும் பண்டிகையாக மட்டுமல்லாமல், உணவு, நம்பிக்கை, குடும்பம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு கலாச்சார அனுபவமாக கொண்டாடுமாறு தமிழ் போல்ட்ஸ்கை வாசகர்களை அழைக்கிறது.



Click it and Unblock the Notifications















