Latest Updates
-
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க..
Solar Eclipse 2023: அக்டோபரில் நிகழும் இந்த ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிகளின் செல்வம் பெருகும்...
Solar Eclipse 2023 In Tamil: பித்ரு பட்சம் அல்லது மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முந்தைய 14 நாட்கள் ஆகும். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தை மகாளய அமாவாசை என்று அழைப்பர். இந்த மகாளய பட்ச காலமானது நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியைப் பெற உகந்த நாளாகும்.
மகாளய பட்சத்தின் போது இறந்தவர்களின் ஆன்மா எமனின் அனுமதி பெற்று, சூரியனின் கதிர்களில் இளைப்பாற பூமிக்கு வருவதாக கருட புராணம் கூறுகிறது. மகாளய பட்ச நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களை வழிபடும் போது, நம் முன்னோர்கள் செய்த தீவினை, முற்பிறவியில் நாம் செய்த தீவினை மற்றும் இப்பிறவியில் செய்யும் தீவினைகள் நீங்கி, முன்னோர்களின் ஆசியால் வாழ்க்கை சந்தோஷமாகவும், செழிப்போடும் இருக்கும்.

இந்த ஆண்டின் மகாளய பட்ச காலமானது செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 14 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. சாதாரணமாக மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த ஆண்டின் மகாளய அமாவாசை இன்னமும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் தான் 2023 ஆம் ஆண்டின் சூரிய கிரகணம் நிகழ்கிறது.
சூரிய கிரகணத்தால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கம் இருக்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய கிரகணத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவதோடு, நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணத்தால் சூரியனின் சிறப்பான அருள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உங்களின் பணி பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றி பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருப்பதோடு, வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். வியாபாரிகளுக்கு அதிர்ஷ்த்தின் ஆதரவால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். இக்காலத்தில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். குடும்பத்தினருடன் சிறப்பான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications