Latest Updates
-
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம்
30 ஆண்டுகளுக்கு பின் சனியும், சூரியனும் எதிரெதிரே இருப்பதால்.. இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..!
Sun, Saturn Will Be Face To Face After 30 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
அதே சமயம் சனி பகவானும் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதாவது தற்போது சூரியனும், சனி பகவானம் எதிரெதிரே 180 டிகிரியில் அமைந்துள்ளனர்.

சூரியனும், சனி பகவானும் பகைமை உணர்வு கொண்டவர்கள். அதே வேளையில் குரு பகவானின் 5 ஆவது பார்வை சூரியனின் மீது விழுகிறது. இதுப்போன்ற நிகழ்வு சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்நிகழ்வால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் காண்போம்.
ரிஷபம்
சனி மற்றும் சூரியனின் நிலையால் ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். இக்காலத்தில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். காதல் திருமணம் செய்ய நினைத்தால், அதில் தடைகள் ஏற்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சனி மற்றும் சூரியனின் நிலையானது தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளைக் கொண்டு வரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது. வணிகர்கள் எந்த முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சனி மற்றும் சூரியனின் நிலையால் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது மனநிலையை படுமோசமாக பாதித்துவிடும். தேவையில்லாமல் கோபப்படுவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அலுவலகத்தில் விஷயங்கள் சாதகமாக இருக்காது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சனி மற்றும் சூரியனின் நிலையால் மிகவும் மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். காதலிப்பவர்கள் காதல் முறிவை சந்திக்கலாம். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அலுவலகத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்காது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சூரியன் மற்றும் சனியின் நிலையால் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும் மற்றும் குடும்பத்திலும் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். உண்ணும் உணவுகளில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் உணவுகளால் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications