2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தன்று இந்த 4 ராசிக்கு பெரிய லக் அடிக்கப் போகுது...

Solar Eclipse On April 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்னும் ஓரிரு நாட்களில் நிகழவுள்ளது. கிரகணம் ஒரு நல்ல நிகழ்வாக கருதப்படாவிட்டாலும், ஜோதிடத்தில் தனி முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. சூரிய கிரகணத்தின் போது சூரியன் வலுவிழந்து இருப்பார். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2023 ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழவுள்ளது. அதுவும் சூரியன் மேஷ ராசியில், அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கும் போது கிரகணம் நிகழ்கிறது.

ஆனால் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால், சூதக் காலம் எதுவும் இல்லை. ஆயினும் சூரிய கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். என்ன தான் கிரகணம் ஒரு கெட்ட நிகழ்வாக கருதப்பட்டாலும், இந்த சூரிய கிரகணத்தால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Solar Eclipse On April 2023: These Zodiacs Will Get More Money In Tamil

ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இக்காலமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இக்காலத்தில் வேலை மற்றும் வருமானத்தில் நல்ல முன்னேற்றமும் உயர்வும் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இந்நாளில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைக்கலாம். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமான முடிக்கப்படலாம்.

மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணமானது மிகவும் அற்புதமாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண வரவிற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்கள் தங்கள் வருமானத்தில் உயர்வைக் காணலாம்.

தனுசு

தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த கிரகணமானது தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கையில் பணம் அதிகம் சேரும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாகவும், இனிமையாகவும் இருக்கும்.

மீனம்

மீன ராசியின் 2 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபரிபவர்கள் மற்றும் வியாபாரிகளின் வருமானத்தில் உயர்வு ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion