Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
கடவுளுக்கும் மத சடங்குகளுக்கும் எலுமிச்சை பழத்தை நாம் ஏன் யூஸ் பண்ணுறோம் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
இந்து மத சடங்குகளில் மிகவும் முக்கியமான பொருளாக இருப்பது எலுமிச்சை. எலுமிச்சை பழம் இல்லாமல் எந்தவொரு மங்கள சடங்குகளும் முழுமையடையாது. ஏன் நமது கலாச்சாரத்தில் எலுமிச்சை ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
சமஸ்கிருதத்தில் எலுமிச்சை நிம்பு பலா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு புனிதமான பழம் என்று நம்பப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே, எலுமிச்சை ஆயுர்வேத மருந்துகள், வீட்டு வைத்தியம் மற்றும் தினசரி சமையல் பயன்பாடுகளில் அதன் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது.

அதேநேரத்தில் வீட்டில் எதிர்மறை ஆற்றலை போக்கவும் எலுமிச்சை உதவுவதாக அறியப்படுகிறது. புராணங்கள் மற்றும் கலாச்சார நம்பிக்கைகளின்படி, இந்த சிறிய சிட்ரஸ் பழத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
எலுமிச்சை ஏன்?
எலுமிச்சை பழம் ஆன்மிக உலகில் மிகவும் முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. இந்த பழத்தைப் பற்றிய குறிப்பு புராண கதைகளில் காணப்படுவதால், இந்த பழம் ஆன்மீக உலகில் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீகம் மற்றும் இந்து மதத்தில் எலுமிச்சையின் தோற்றம் மற்றும் பொருத்தத்தை வரையறுக்கும் ஒரு சுவாரஸ்யமான புராணக்கதை பற்றி இங்கே காணலாம்.
புராணங்களில் எலுமிச்சையின் முக்கியத்துவம்
எலுமிச்சையின் வரலாறு வேத காலத்திலிருந்து தொடங்குகிறது. அப்போது நிம்பாசுரா என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த அசுரன்(அரக்கன்) பஞ்சத்தை ஏற்படுத்தி மக்களை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உலகம் பேரழிவை சந்திக்க வேண்டியிருந்தது. வலிமைமிக்க இந்த அசுரன், சிவபெருமான் மற்றும் பிரம்மாவிடம் வரம் பெற்றதால் மிகவும் சக்திவாய்ந்தவராக மாறினார்.
அசுரனின் கொடூரமான செயல்களால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை எண்ணிய அகஸ்திய ரிஷி, அசுரனால் ஏற்பட்ட அழிவிலிருந்து பூமியைக் காப்பாற்றுவதற்காக சடங்குகள் செய்து பெரும் தவம் செய்தார். முனிவர் அசுரனின் கொடூரமான ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர சக்தி தேவியிடம் பிரார்த்தனை செய்தார்.
முனிவரின் கடுமையான தவத்தால் மனம் மகிழ்ந்த சக்தி தேவி, நிம்பாசுரனைக் கொன்று, பஞ்சத்தை போக்கி மக்களை மகிழ்ச்சியாக வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால்தான் சக்தி தேவி, சாகம்பரி தேவியாக வணங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தேவி சாகம்பரி ஆதிசக்தியின் அவதாரம்.
சாகம்பரி என்பதற்கு "மனிதகுலத்தை பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஊட்டமளித்து காத்தவர்" என்ற பொருள். அசுரனை அழிக்கவும் பஞ்சத்தை தீர்க்கவும் துர்க்கை சாகம்பரியாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்து கலாச்சாரத்தில் எலுமிச்சை
அசுரன் நிம்பாசுரன் இறப்பதற்கு முன்பே, தன் தவறுகளை உணர்ந்து, சாகம்பரி தேவியின் தெய்வீக சக்தியைக் கண்டு, அவளது புனித பாதங்களில் தனக்கு இடம் தருமாறு வேண்டினார். தேவி நிம்பாசுரனுக்கு 'நிம்பு பலா' என்ற பழத்தின் வடிவத்தில் எப்போதும் மக்களால் பூஜிக்கப்படுவார் என்று வரம் அளித்தார்.
அன்றிலிருந்து எலுமிச்சை இந்து சடங்குகளில் இன்றியமையாத பகுதியாக இருந்து வருகிறது. அதன்பிறகே, சக்தி தேவிக்கு எலுமிச்சையில் மாலை அணிவித்து பூஜை செய்யப்படுகிறாதாகக் கூறப்படுகிறது. மக்களும் தங்கள் வேண்டுதல் நிறைவேற கடவுளுக்கு எலுமிச்சை மாலையை காணியாக்க செலுத்துகிறார்கள்.
எலுமிச்சை மற்றும் கோபம்
மற்றொரு பிரபலமான புராண சடங்குகளின் நம்பிக்கையின்படி, சண்டி அல்லது மாகாளி தேவியின் சடங்குகளிலும் எலுமிச்சை வழங்கப்படுகிறது. ஏனெனில் இந்த பழத்தை சமர்ப்பிப்பது அவரது கடுமையான கோபத்தை தணிக்க உதவும் என்று நம்பப்படுகிறது. அதனால், தெய்வத்தின் கோபம் தனிக்கப்படுகிறது.
எதிர்மறை ஆற்றல்களைத் தடுக்க எலுமிச்சை
அதுமட்டுமல்லாமல், எலுமிச்சை எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகள் வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால், எலுமிச்சைக்கு வலிமையான ஆற்றலைத் தாங்கி, எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் தீய கண் திருஷ்ட்டிகளின் தாக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது.
உண்மையில், கோவில்களில் கடவுளுக்கு படைத்த எலுமிச்சையை கொண்டு வந்து வீட்டில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தை அகற்ற உதவும் என்று நம்பப்படுகிறது. மேலும், எந்த பரிகார மற்றும் தாந்தரீக பூஜைகளிலும் எலுமிச்சைதான் முதல் பொருளாக இருக்கும்.
முதன்முதலாக பைக், கார் வாங்கும்போது, எலுமிச்சையை டயருக்கு அடியில் வைத்து வண்டியை ஓட்ட ஆரம்பிப்பது, புதிதாக குடியேறும் வீட்டின் கதவு மூளைகளில் எலுமிச்சையில் குங்குமம் தடவி வைக்கப்படுகிறது. வீட்டு வாசலில் மட்டுமல்லாது கார், லாரி போன்ற வாகனங்களிலும் எலுமிச்சை கண் திருஷ்ட்டிக்காக பயன்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications

