Latest Updates
-
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும் -
இந்த 5 ராசிக்காரங்க பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்ல... அதை பல மடங்கு பெருக்குவதிலும் வல்லவர்களாம்! -
இந்தியாவின் 'வாழை தலைநகரம்' என்று அழைக்கப்படும் மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கருணைக்கிழங்கை இந்த பக்குவத்தில் வறுவல் செய்யுங்க.. மீன் வறுவல் மாதிரி டேஸ்ட்டா இருக்கும்.. -
2 ஸ்பூன் துவரம்பருப்பும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கொங்கு காட்டா குழம்பை செய்யுங்க - செமையா இருக்கும் -
புரோஸ்டேட் வீக்கமும்.. புற்றுநோயும்.. ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! -
முகலாய பேரரசர் அக்பரின் ஒரேயொரு இந்து மருமகன் யார் தெரியுமா? அவர்கள் திருமணம் ஏன் நடந்தது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து ராகுவால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் இவங்க தான்! உங்க ராசியும் இதுல இருக்கா?
சனியின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் அதிகரிக்கப் போகுது..
Shani Nakshatra Transit 2023: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். ஏனெனில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களை அளிப்பவர். இப்படிப்பட்ட சனி பகவானின் இயக்கத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
சனி பகவான் ராசியை மாற்றுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். சனி பகவான் ராசி மாற்றம் செய்வதை தவிர, நட்சத்திர மாற்றங்களையும் செய்வார். அந்த வகையில் தற்போது சனி பகவான் ராகுவின் சதய நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சனி பகவான் அக்டோபர் 15 ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் இருந்து அவிட்டம் நட்சத்திரத்திற்கு செல்கிறார். அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். சனியும், செவ்வாயும் எதிரி கிரகங்கள். செவ்வாயின் நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே நிச்சயம் காணப்படும்.
குறிப்பாக சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அவிட்டம் நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சனி நட்சத்திர பெயர்ச்சியால் பல சிரமங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக நிதி நிலையில் மோசமான தாக்கம் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் சிறு விஷயங்களுக்கும் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் பல தடைகளை சந்திக்கலாம்.
செலவுகள் அதிகமாகும். அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். வேலை குறித்த கவலை அதிகரிக்கும். மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடாதீர்கள். இல்லாவிட்டால், அதுவே பெரிய பிரச்சனையைக் கொண்டு வரும். முக்கியமாக அக்டோபர் 15-க்கு பின் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது சற்று மோசமான பலன்களை வழங்கும். அக்டோபர் 15-க்கு பின் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நிலையிலும் மோசமான விளைவு ஏற்படும்.
ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை தேடுபவர்கள், இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். குடும்பத்தினருடன் சண்டைகள் அதிகம் வரலாம். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
மீனம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். யார் பேச்சையும் கேட்டு பணத்தை எதிலும் முதலீடு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் ஏமாற்றமடைந்து, நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். காதல் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். பழைய நோய் மீண்டும் தலைத்தூக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
