Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
Shani Jayanti 2024: இன்னிக்கு இந்த தவறை செஞ்சுடாதீங்க.. இல்ல சனிபகவானின் கோபத்துக்கு ஆளாவீங்க..
Shani Jayanti 2024: சனி பகவான் என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கும். இதற்கு காரணம் அவரைப் பற்றிய தவறான புரிதல் தான். உண்மையில் சனி பகவானைக் கண்டு எவரும் அஞ்சத் தேவையில்லை. இவர் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களை தான் அளிப்பார். அதில் நல்ல செயல்களை செய்தால் நல்ல பலன்களையும், அதுவே கெட்ட செயல்களை செய்தால் மோசமான பலன்களையும் அளிப்பார். இவர் எப்போதும் பாரபட்சம் பார்க்கமாட்டார். இப்படிப்பட்ட சனி பகவான் சூரியனின் மகனாவார்.
சனி பகவான் வைகாசி மாதத்தில் அமாவாசை நாளில் பிறந்தார். இவர் பிறந்த நாள் சனி ஜெயந்தியாக இந்து மதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த சனி ஜெயந்தி நாளில் ஒருசில விதிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

இந்த ஆண்டின் சனி ஜெயந்தியானது ஜூன் 06 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சனி பகவானை மகிழ்ச்சியடைய செய்ய விரும்பினால், அவருக்கு பிடித்ததை படைத்து பூஜைகளை செய்து வழிபட வேண்டும். அதோடு ஒருசில விஷயங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இப்போது சனி ஜெயந்தி நாளில் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
* சனி பகவான பிறந்த சனி ஜெயந்தி நாளில் இரும்பு பொருட்கள், துடைப்பம், உப்பு, எண்ணெய், எரியக்கூடிய பொருட்கள், கருப்பு காலணிகள், கருப்பு எள்ளு விதைகள் போன்றவற்றை வாங்கக்கூடாது. இவற்றை வாங்கினால், சனி பகவான் கோபமடைவார். மேலும் இந்த பொருட்களை வாங்குவதன் மூலம் குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
* சனி ஜெயந்தி நாளில் வீட்டிற்கு யாரேனும் உணவு மற்றும் தண்ணீர் கேட்டு வந்தால், அவர்களிடம் இல்லை என்று கூறி, வெறும் கையில் அனுப்பக்கூடாது. அப்படி அனுப்பினால் கடன் அதிகரிக்கும், குடும்பத்தில் பிரச்சனை அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்று கூறப்படுகிறது.
* சனி ஜெயந்தி நாளில் ஏழை மக்கள், தொழிலாளர்கள் மற்றும் வேலை செய்பவர்களை எக்காரணம் கொண்டும் மோசமாக நடத்தவோ அல்லது அவமதித்து பேசவோ செய்யாதீர்கள். இப்படி செய்தால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகி, வாழ்வில் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
* சனி ஜெயந்தி நாளில் துளசி இலைகள், அரச மர இலைகள், வில்வ மர இலைகள் போன்றவற்றை பறிக்கக்கூடாது. இவற்றைப் பறித்தால் நோய்கள், வலிகள் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
* சனி பகவானை எப்போதும் வழிபடும் போது எவ்விதமான செம்பு பாத்திரத்தையும் பயன்படுத்த கூடாது. மேலும் சனி பகவானை வழிபடும் போது திசைகளில் கவனத்தை செலுத்த வேண்டும். எப்போதும் சனி பகவானை மேற்கு திசையை நோக்கியவாறு தான் வழிபட வேண்டும். மேலும் சனி பகவானை வழிபடும் போது அவரது கண்களை பார்த்து வழிபடக்கூடாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











