Latest Updates
-
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
காலையில் இந்த பறவை மற்றும் விலங்குகள் உங்க கண்ணுல தென்படுதா? அப்ப அது உங்க அதிர்ஷ்டத்தை தான் குறிக்கிறது..
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொரு விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. முக்கியமாக இந்து மதத்தில் ஒவ்வொரு விலங்குகள் மற்றும் பறவைகளும் ஒவ்வொரு தெய்வங்களுடன் ஒப்பிட்டு வணங்கப்படுகின்றன. உதாரணமாக, நாய் கால பைரவராக கருதப்படுகிறது. அதேப் போல் காகம் சனி பகவானாக கருதப்படுகிறது.
ஜோதிடத்தின் படி ஒருவரது அதிர்ஷ்டத்தை விலங்குகள் மற்றும் பறவைகள் உணர்த்துகின்றன. அதுவும் ஒருவர் காலையில் எழுந்ததும் ஒருசில பறவைகள் மற்றும் விலங்குகளைக் கண்டால், அது அந்நாள் சிறப்பாக இருக்கப் போகிறது என்று அர்த்தம்.

மேலும் இந்நாளில் மேற்கொள்ளும் விஷயங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும், நல்ல பண வரவு இருக்கும், விருப்பங்கள் நிறைவேறும் என்பனவற்றைக் குறிக்கிறது. இப்போது எந்த பறவைகள் மற்றும் விலங்குகள் ஒருவரது அதிர்ஷ்டத்தை குறிக்கிறது என்பதைக் காண்போம்.
கிளி
காலையில் எழுந்ததும் ஒருவர் கிளியைக் காண்பது என்பது அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் கிளியானது குபேரனுடன் தொடர்புடையது. மேலும் இது காமதேவனின் வாகனமும் கூட. இப்படிப்பட்ட கிளியை காலையிலோ அல்லது ஏதாவது முக்கியமான வேலையை செய்யத் தொடங்கும் முன்போ கண்டால், அது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. அதுவும் அந்நாளில் செய்யவிருக்கும் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் மற்றும் திடீர் பண வரவு கிடைக்கும் என்று அர்த்தம்.
ஆமை
வாஸ்து சாஸ்திரத்தில் மட்டுமின்றி, சீன வாஸ்து சாஸ்திரமான ஃபெங் சூயின் படி, ஆமை மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் தான் ஆமை சிலையை வீட்டில் வைப்பது நல்லது என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட ஆமையை ஒருவர் காலையில் எழுந்ததும் கண்டால், அது நீங்கள் விரைவில் நிறைய பணத்தை சம்பாதிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் இது அந்நாள் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போவதையும் குறிக்கிறது.
கருப்பு எறும்பு
கருப்பு நிற எறும்புகளை வீட்டில் ஆங்காங்கு காண்போம். இப்படி வீட்டில் திரியும் இந்த கருப்பு எறும்புகள் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. நம்பிக்கைகளின் படி, கருப்பு நிற எறும்புகளானது நீதியின் கடவுளான சனி பகவானுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட கருப்பு நிற எறும்புகள் வீட்டிற்குள் நுழைவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த கருப்பு நிற எறும்புகளை காலையில் எழுந்ததும் நீங்கள் கண்டால், அது அந்நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போவதைக் குறிக்கிறது. மேலும் கருப்பு எறும்புகளை ஒருபோதும் கொல்லக்கூடாது.
ஆட்டு மந்தை
ஒருவர் காலையில் எழுந்ததும் அல்லது வெளியே முக்கியமான வேலையாக செல்லும் போதோ, ஆட்டு மந்தையை கண்டால், அது நீங்கள் செய்யப் போகும் வேலை வெற்றிகரமாக முடிவடையும் என்பதைக் குறிக்கிறது. மேலும் ஆட்டு மந்தையானது ஒருவருக்கு வரவிருக்கும் அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது.
பசு மாடு
காலையில் எழுந்ததும் பசு மாட்டைக் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் பசு மாடு அனைத்து தெய்வங்களும் குடியிருக்கும் காமதேனுவாக இந்து மதத்தில் கருதப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட பசு மாட்டை காலையிலோ அல்லது வெளியே செல்லும் போது எதிரில் வருவதையோ கண்டால், அது நல்லதைக் குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications