Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தமிழ்நாட்டின் இந்த இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும்-ன்னு கொஞ்சம் பாருங்களேன்!
தமிழர்களின் நிலமான தமிழ்நாடு ஏராளமான இயற்கை காட்சிகள் மற்றும் கலாச்சார செல்வங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விடுமுறையை மகிழ்ச்சியாக செலவழிக்கும் வகையில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அதில் நீர்வீழ்ச்சிகள், வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், பூங்காக்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நீங்கள் அடிக்கடி சுற்றுலா செல்வீர்களானால், நிச்சயம் தமிழ்நாட்டில் உள்ள பல பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு சென்றிருப்பீர்கள். தற்போது குளிர்காலம் என்பதால், மற்ற நாடுகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டிலும் பனி பொழிகிறது தான். இருப்பினும், வெளிநாட்டைப் போன்று இருக்காது.

எனவே சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் தமிழ் போல்ட்ஸ்கை தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என AI உருவாக்கிய படங்களை கீழே கொடுத்துள்ளது.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தான் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் காவேரி நதி நுழைகிறது. அப்படி நுழையும் போது பாறைகளின் மேல் நீர் வேகமாக பாய்ந்தோடும். அந்த காட்சி கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கண் கொள்ளா காட்சியாக இருக்கும். நீங்கள் அடிக்கடி இந்த ஒகேனக்கல் செல்வீர்களானால், இந்த பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என AI உருவாக்கிய படம் தான் இது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
தமிழ்நாட்டின் புனிதமான மற்றும் முக்கியமான ஒரு சுற்றுலாப் பகுதி தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தினந்தோறும் 15,000-க்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர். சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமானின் மனைவியான மீனாட்சி அம்மனுக்காக இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்வீர்களானால், இங்கு பனிப்பொழிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என AI உருவாக்கிய படம் தான் இது.
மகாபலிபுரம்
மகாபலிபுரம் இந்தியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய தளமாகும். இது தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்று. மகாபலிபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் ஒரு பகுதியான பஞ்ச ரதங்கள் தமிழ்நாட்டின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். ஒற்றைக்கல் பாறை வெட்டு கோவில் கட்டிடக்கலையின் விதிவிலக்கான மற்றும் அற்புதமான மாதிரியாகும். இப்படிப்பட்ட மகாபலிபுரத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என AI உருவாக்கிய படம் தான் இது.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சாவூர் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தஞ்சை பெரிய கோவில் தான். மகத்தான கலாச்சார மதிப்பு கொண்ட தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள், புடவைகள், ஓவியங்களுக்கும் பெயர் போனது. தஞ்சாவூரில் ஆண்டு முழுவதும் வெப்பமண்டல வானிலை நிலவுகிறது. உலோகச் சிற்பங்களுக்குப் பெயர் பெற்ற தஞ்சாவூர், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க இடங்களுள் ஒன்று. இந்த தஞ்சை பெரிய கோவிலில் பனிப்பொழிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என AI உருவாக்கிய படம் தான் இது.
பொள்ளாச்சி மங்கி நீர்வீழ்ச்சி
பொள்ளாச்சி மங்கி நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாகும். இயற்கை விரும்பிகளுக்கு இந்த பகுதி மிகவும் பிடிக்கும். ஏனெனில் இங்கு ஏராளமான கண்களைக் கவரும் இயற்கை காட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் ஏராளமான மக்கள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வருகை தருவார்கள். இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் தான் ஆழியார் அணை உள்ளது. இந்த பொள்ளாச்சி மங்கி நீர்வீழ்ச்சி பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என AI உருவாக்கிய படம் தான் இது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு திட்டம் போட்டால் பெரும்பாலான மக்கள் செல்லும் இடங்களாகும். இவற்றில் நீங்கள் எந்த இடத்திற்கு அதிகம் சென்றுள்ளீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications




