Latest Updates
-
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்?
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் வக்ரமாகும் சனி: இந்த 3 ராசிக்காரர்களை பணக்காரராக்க போகுது...
Saturn Retrograde In Aquarius 2023: வேத ஜோதிடத்தில், சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவராக கருதப்படுகிறார். இதனாலேயே இவர் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். நவகிரகங்களில் சனி ராசியை மாற்ற இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதனால் சனி பகவானின் தாக்கமானது ஒருவரது வாழ்வில் அதிகம் உள்ளது.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் தனது சொந்த அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்தார். கும்ப ராசியில் நுழைந்த சனி பகவான், ஜூன் மாதம் அந்த ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார்.

கிரகங்கள் வக்ர நிலையில் சற்று பலவீனமாக இருக்கும். மேலும் அந்த கிரகங்களால் கிடைக்கவிருக்கும் பலன்கள் தாமதமாகும். கும்ப ராசியில் வக்ரமான சனி பகவான், அந்த ராசியில் நவம்பர் வரை வக்ர நிலையிலேயே பயணிக்கவுள்ளார்.
இப்படி சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், பணக்காரராகும் வாய்ப்புக்களையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகரம் சனி பகவான் ஆளும் மற்றொரு ராசியாகும். தற்போது சனி பகவான் மகர ராசியின் 2 ஆவது வீட்டில் வக்ர நிலையில் உள்ளார். 2 ஆவது வீட்டில் உள்ள சனியால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் மூன்றாம் கட்டம் நடக்கிறது.
ஆனால் சனி வக்ர நிலையில் இருப்பதால், இக்காலத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக இக்காலத்தில் முடிக்கப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். உங்களின் பேச்சு இக்காலத்தில் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். வெளிநாடுகளுடன் தொடர்புடைய வணிகத்தை செய்து கொண்டிருப்பவர்கள், இக்காலத்தில் நல்ல பண வரவைப் பெற வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இக்காலத்தில் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டின் அதிபதியான சனி, 5 ஆவது வீட்டில் வக்ர நிலையில் உள்ளார். இதனால் இக்காலத்தில் குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். இக்காலத்தில் செய்யும் முதலீடுகளால் நல்ல லாபத்தைக் காணக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் மற்றும் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள்.
காதலிப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் இனிமையாக இருக்கும். காதல் திருமணம் செய்ய நினைத்தால், அந்த எண்ணம் நிறைவேறும். இக்காலத்தில் எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. இதனால் நிதி நிலையில் உயர்வு ஏற்படப் போகிறது.
ரிஷபம்
ரிஷப ராசியின் தொழில் மற்றும் வியாபார வீடான 10 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். தொழில் வீட்டில் சனி இருப்பதால், இதுவரை பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம்.
ஆனால் வக்ர நிலையில் அடுத்த 5 மாத காலம் சனி இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள். நல்ல ஆதாயங்களைப் பெறக்கூடும். நீண்ட நாட்களாக வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
இதனால் இதுவரை சந்தித்த பண பிரச்சனை நீங்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாயப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications