Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
சனியால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
Saturn Made Kendra Trikona Rajyoga: வேத ஜோதிடத்தில் சனி பகவானின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சனி பகவான் ராசியை மாற்ற இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதனால் சனி பகவானின் தாக்கம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அதிகமாகவே இருக்கும்.
மேலும் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களும் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார்.

கும்ப ராசியில் சனி பகவான் நுழைந்ததால், கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கினார். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணியிடத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். கூட்டு தொழில் தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுகளும் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் பல ஆசைகளை நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களை ஈர்ப்பதில் வல்லவராக இருப்பார்கள். குடும்ப சூழல் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல சிறப்பான பலனைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications