Latest Updates
-
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
வக்ர சுக்கிரன் உருவாக்கிய விபரீத ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு திடீர் பண வரவும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும்..
Retrograde Venus Made Vipreet Rajyoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்களின் போது சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகக்கூடும். பொதுவாக ராஜயோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கும் போது உருவாகும்.
அந்த வகையில் கடக ராசியில் வக்ரமாக இருக்கும் சுக்கிரன் அஸ்தமன நிலையில் உள்ளார். இப்படி சுக்கிரன் கடக ராசியில் வக்ரமாக இருப்பதால், விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.

விபரீத ராஜயோகம் என்பது எதிர்பாராத நற்பலன்களை வாரி வழங்கக்கூடிய ராஜயோகம். அதாவது இந்த ராஜயோகமானது ஆண்டியையும் அரசனாக்கும் சக்தி கொண்டது. இப்படிப்பட்ட ராஜயோகம் தான் தற்போது உருவாகியுள்ளது.
இந்த ராஜயோகத்தினால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண வரவும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது அற்புதமான பலன்களை வழங்கவுள்ளது. இந்த யோகத்தின் போது சுக்கிரன் 3 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும்.
மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் ஆரோக்கியம் சற்று மோசமாகும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்கார்களுக்கு விபரீத ராஜயோகமானது அபரிமிதமான நற்பலன்களை வழங்கவுள்ளது. சுக்கிரன் 12 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் இக்காலத்தில் தொழில் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் நீதிமன்ற வழக்குகள் நீண்ட காலமாக நடந்து வந்தால், இக்காலத்தில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த யோக காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது சிறப்பான பலன்களை வழங்கும். ஏனெனில் சுக்கிரன் 8 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் இக்காலத்தில் சிக்கிய பணம் கைக்கு திரும்ப கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான துறையில் வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். ஆனால் விபத்து ஏற்படும் ஆபத்துள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications