Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின்: இவரோட சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Ravichandran Ashwin: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்தியா கிரிக்கெட் அணியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கை வகித்து வருகிறார். அஸ்வின் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகள் மற்றும் 3503 ரன்களையும் குவித்துள்ளார். அதோடு 6 டெஸ்ட் சதங்களையும் அடித்துள்ளார்.
சொல்லப்போனால் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்ற ஒரே வீரர் இவரே ஆவார். அப்படிப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று சர்தேச கிரிக்கெட்டில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அஸ்வின் திடீரென்று இப்படி ஓய்வை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி பிறந்த அஸ்வின், நவீன யுகத்தில் கிரிக்கெட் உலகில் மிகவும் பயமுறுத்தும் சில ஆஃப் ஸ்பின்னர்களுடன் ஒருவராவார். மேலும் இவர் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினின் சொத்து மதிப்பு, அவரது கார் கலெக்ஷன்கள் குறித்து காண்போம்.
ரவிச்சந்திரன் அஸ்வினின் சொத்து மதிப்பு
அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டில் ரவிச்சந்திரன் அஸ்வினின் சொத்து மதிப்பு சுமார் ரூ.132 கோடியாகும். இவ்வளவு சொத்தையும் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு, தேசிய விளையாட்டு மற்றும் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டு மூலம் சம்பாதித்துள்ளார். இது தவிர அஸ்வின் பல பெரிய பிராண்டுகளின் விளம்பரத்தில் நடித்தும், நிறைய பணத்தை சம்பாதித்து வருகிறார். மேலும் 2022-23 ஆம் ஆண்டில் பிசிசிஐ கிரேடு ஏ வீரர்களின் பட்டியலில் அஸ்வின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்த வீரர்களுக்கு ஆண்டுக்கு சம்பர் ரூ.5 கோடி ஆகும்.
ஐபிஎல் மூலம் நிறைய வருமானம்
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒரு திருவிழா போன்று நடைபெறும். இந்த ஐபிஎல்-லில் அஸ்வின் 2008 ஆம் ஆண்டில் இருந்து விளையாடத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், 2017-ல் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காகவும் ஆடினார். அதன் பின் 2018 ஆம் ஆண்டில் பஞ்சாப் அணியால் ரூ. 7.6 கோடிக்கு வாங்கப்பட்டார் மற்றும் அந்த அணியின் கேப்டனாகவும் ஆனார். 2024 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரூ. 5 கோடிக்கு வாங்கியது. வருகிற 2025 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ரூ. 9.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
சென்னையில் சொந்த வீடு
ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் மூலம் ஈட்டிய வருமானத்தைக் கொண்டு, 2021 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு ஆடம்பரமான பங்களாவை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ. 9 கோடி இருக்கும். இந்த ஆடம்பரமான வீட்டில் அஸ்வின் தனது மனைவி ப்ரீத்தி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
கிரிக்கெட் வீரராக இருந்தாலும், அஸ்வினுக்கு கார்கள் மீதும் பிரியம் அதிகம். இவரிடம் ரூ. 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ்ராய்ஸ் கார் உள்ளது. இது தவிர ரூ. 93 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ 7 கார் ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications