Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மேஷத்தில் ராகு, புதன், சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டம் அதிகரிக்கப் போகுது!
Rahu Mercury Venus Conjunction In Aries 2023: கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் புதன். இந்த புதன் தற்போது குரு ஆளும் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் 2023 மார்ச் 31 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நுழைகிறார்.
முக்கியமாக இந்த மேஷ ராசியில் ஏற்கனவே ராகுவும், சுக்கிரனும் பயணித்து வருகிறார்கள். இப்படியிருக்க புதனும் மேஷ ராசிக்கு நுழையும் போது, மேஷ ராசியில் ராகு, சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கை நிகழ்கிறது.

பொதுவாக கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு நற்பலனை வாரி வழங்கினாலும், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் தர வாய்ப்புள்ளது. அதுவும் புதனும் மேஷ ராசியின் அதிபதியான செவ்வாயும் எதிரெதிர் கிரகங்களாக கருதப்படுகின்றன. எனவே மார்ச் 31-ல் நடக்கவுள்ள புதன் பெயர்ச்சிக்கு பின் எந்த ராசிக்காரர்கள் எல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் இந்த சேர்க்கை நிகழ்கிறது. இதனால் ரிஷப ராசிக்காரர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த பண பரிவர்த்தனைகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் பண இழப்புக்களை சந்திக்க வாய்ப்புள்ளது. மேலும் பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்பவர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சிறு வேலையை முடிக்கவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் இந்த கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், கவனமாக செலவழிக்க வேண்டும். குடும்பத்தில் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்நிலையில் உங்கள் கோபத்தைக் குறைக்க வேண்டும். நீங்களும் கோபப்பட்டால் குடும்பத்தில் பிரிவினை ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் இந்த 3 கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் பலவிதமான பிரச்சனைகளை இக்காலத்தில் சந்திக்க நேரிடும். சிறு வேலையை முடிப்பதற்கும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. நிதி நிலை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதனால் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் இந்த 3 கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் கும்ப ராசிக்காரர்களும் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களை வீழ்த்த திட்டமிடுவார்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடல் நல பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


