Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
ராகு கேது பெயர்ச்சி 2023: அக்டோபர் 30 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Rahu Ketu Transit 2023: நவகிரகங்களில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களும் எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும். மேலும் இந்த இரண்டு கிரகங்களும் ராசியை மாற்றுவதற்கு 18 மாதங்கள் ஆகும்.
குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சிக்கு அடுத்தப்படியாக, ஒருவரது வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெயர்ச்சி என்றால் அது ராகு கேது பெயர்ச்சி தான். 2023 ஆம் ஆண்டின் ராகு கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி நிகழவுள்ளது. அதில் ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் செல்லவிருக்கின்றனர்.

இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் இந்த ராகு, கேது பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது. அதுவும் திடீர் பண வரவு கிடைக்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். அதேப் போல் கேது 6 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 30 முதல் அற்புதமாக இருக்கப் போகிறது. நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
நீண்ட காலமாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம், ராகு கேது பெயர்ச்சிக்கு பின் கைக்கு வந்து சேரும். நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக மீண்டும் நடக்கும். ஆனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். அதே சமயம் கேது 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராகு கேது பெயர்ச்சியானது ஏராளமான நன்மைகளைத் தரப் போகிறது. குறிப்பாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத பணத்தைப் பெற வாய்ப்புள்ளது. வீட்டு சூழல் மற்றும் அலுவலக சூழல் நன்றாக இருக்கும். முக்கியமாக கேதுவின் ஆதரவு கிடைப்பதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு எப்போதும் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். அதேப் போல் கேது 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அக்டோபர் 30 முதல் பிரகாசிக்கப் போகிறது. ஜோதிடம், ஆன்மீகம், எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு இனிமேல் அற்புதமாக இருக்கப் போகிறது.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், ராகு கேது பெயர்ச்சிக்கு பின் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
