Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
இந்த 5 ராசிக்காரங்க எல்லாரும் எப்பவும் பாராட்டிக்கிட்டே இருக்கணும்னு அல்பத்தனமா ஆசைபடுவாங்களாம்!
சிம்ம ராசிக்காரர்கள் அடுத்தவர்களின் கவனத்தைத் தேடுபவர்கள். இது நீங்கள் அவர்களை பாராட்டுவதைப் பற்றியது. இந்த ராசிக்காரர்களை நீங்கள் தொடர்ந்து பாராட்டிவந்தால், அவர்கள் உங்களை இன்னும் அதிகமாக விரும்புவார்கள்.
பாராட்டுக்களை விரும்பாதவர்கள் இவ்வுலகில் யாரேனும் உண்டோ? ஒவ்வொரு உயிரினமும் பாராட்டுக்களை விரும்புகிறது. இருள் நிறைந்த ஒரு சராசரி உலகில் இருப்பதற்கு அனைவருக்கும் பாராட்டும் அங்கீகாரமும் முக்கியம். சில நபர்கள் அதை எடுத்துக்கொண்டு புன்னகைக்கிறார்கள். உங்களிடமிருந்து ஒரு பாராட்டு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் பாராட்டுக்களால் மகிழ்ச்சியாக செழித்து வளரும் மக்கள் உள்ளனர். மேலும் ஒரு கார் நன்றாக வேலை செய்வதற்கு எரிபொருளைப் போல பலர் நன்றாக செயல்படுவதற்கு பாராட்டுக்கள் தேவைப்படுகிறது.

உங்கள் நண்பர் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் அப்படியா? இதை தெரிந்துகொள்ள ஜோதிடம் உங்களுக்கு உதவும். உணவை போன்று பாராட்டுக்கள் அத்தியாவசியமாக தேவைப்படும் ராசிக்காரர்கள் உள்ளனர். அவர்கள் என்னென்ன ராசிக்காரர்கள் என்று இக்கட்டுரையில் காணலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சத்தம்போட்டு யாருக்கும் சொல்ல மாட்டார்கள். ஆனால் இவர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள். இதனால் மக்கள் அவர்களை அடிக்கடி பாராட்டுவார்கள். இந்த ராசிக்காரர்கள் பாராட்டுக்களை பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் செயல்களில் மிகவும் நம்பிக்கையுடன் உறுதியுடன் செயல்படுகிறார்கள். அதனால், பாராட்டுக்கள் அவர்களை சென்றடைகின்றன.

கடகம்
கடக ராசி நேயர்கள் பாராட்டுக்களை மிகவும் விரும்புகிறார்கள். இது இந்த ராசிக்காரர்களின் ஈகோவை அதிகரிப்பது பற்றியது அல்ல, மாறாக அவர்கள் தோற்றம், செயல்கள் மற்றும் திறமையாக இருக்கும் சிறிய விஷயங்களுக்காக பாராட்டப்படுவதையும் ஒப்புக்கொள்வதையும் பற்றியது. பாராட்டுக்களை பெறுவதால், அவர்கள் வெட்கப்படலாம். ஏனென்றால் எல்லா கடக ராசிக்காரர்களுக்கும் ஒரு பாராட்டு பெறுவது எப்படி இருக்கும் என்று தெரியாது. அதற்காக அவர்கள் பாராட்டை விரும்பவில்லை என்று அர்த்தமல்ல.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அடுத்தவர்களின் கவனத்தைத் தேடுபவர்கள். இது நீங்கள் அவர்களை பாராட்டுவதைப் பற்றியது. இந்த ராசிக்காரர்களை நீங்கள் தொடர்ந்து பாராட்டிவந்தால், அவர்கள் உங்களை இன்னும் அதிகமாக விரும்புவார்கள். அவர்கள் பாராட்டுக்களைப் பெறுவதற்காக அழகான ஆடை அணிந்து, திறமைகளை முழுமையாக வளர்த்துக் கொள்கிறார்கள். பாராட்டுக்களை பெறுவதற்காக தங்கள் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் இவர்கள் தனி கவனம் செலுத்துவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கவனத்தைத் தேடுபவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் மற்ரவர்களுக்கு தெரியாமல் பாராட்டுக்களை ஈர்க்கும் வகையில் செயல்பட முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பலரைப் போல் கவர்ச்சியாக இருப்பதை விரும்புகிறார்கள். மேலும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து அவர்களுக்கு அந்த அங்கீகாரம் தேவைப்படுகிறது. எப்போதும் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு பாராட்டுக்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இங்கும் அங்கும் பாராட்டுக்களை பெறுவது விருச்சிக ராசிக்காரர்களை சிறப்பாக உணர வைக்கும். அவர்கள் இந்த பெருமையை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.ஆனால் அவர்களின் டிரஸ்ஸிங் சென்ஸ் அல்லது அவர்கள் சமைத்த உணவு போன்றவற்றிற்காக அவர்கள் பாராட்டப்படாவிட்டால் அவர்கள் காயமடைவார்கள். ஒவ்வொரு சின்னசின்ன விஷயத்திற்கும் பாராட்டை பெற இந்த ராசிக்காரர்கள் விரும்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications
