Latest Updates
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
இந்த 5 ராசிக்காரங்க எந்த விஷயத்திலும் திருப்தியடையவே மாட்டாங்களாம்..இவங்க கூட வாழுறது ரொம்ப கஷ்டமாம்!
கன்னி ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தில் எளிதில் முடிவெடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் விதிவிலக்காக உயர்ந்த தரங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் பரிபூரணமாக இருக்க முயற்சி செய்கிறார்கள்.
இவ்வுலகில் எல்லா நபர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு நபரும் தனித்தனியான வாழ்க்கையை விருப்பங்களை நடத்தைகளை கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு வாழ்க்கையில் விதிவிலக்காக உயர்ந்த ரசனை இருக்கும். அவை அனைத்தும் வாழ்க்கையில் ஆடம்பரம், செல்வம் மற்றும் வசதியைப் பற்றியதாக இருக்கலாம். இந்த நபர்களால் எதார்த்தமான வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ முடியாது. சாதாரண மக்களைப் போல வாழ வேண்டிய சாதாரணமான வாழ்க்கையை அவர்களால் வாழ முடியாது.

அவர்கள் நினைப்பதுபோல வாழ்வில் இருக்க வேண்டும் என்று விருப்புவார்கள். இந்த நபர்கள் தங்கள் உயர் தரத்திற்கு வரும்போது கொஞ்சம் கூட சமரசம் செய்யாமல் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். இந்த நபர்களை ஜோதிடத்தின் மூலம் அடையாளம் காண முடியும். மிக உயர்ந்த தரநிலைகளைக் கொண்டிருக்கக்கூடிய ராசி அறிகுறிகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் மிகவும் பிடிவாதமான மற்றும் வலுவான தரத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களுக்கு சாதகமாக விஷயங்கள் நடக்கும் வரை விடமாட்டார்கள். ரிஷப ராசிக்காரர்கள் மிக உயர்ந்த தரங்களைக் கொண்டிருப்பதால் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கின்றன. இந்த ராசிக்காரர்களின் தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை எதுவாக இருந்தாலும், அவர்கள் விரும்பியதைப் பெறுவார்கள் என்று அவர்கள் அறியும் வரை அவர்கள் அதைவிட்டு விலக மாட்டார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பெரிய விஷயங்களை விரும்புகிறார்கள். சில நேரங்களில், அவர்களின் தரநிலைகள் மிக அதிகமாக இருக்கும். இந்த ராசிக்காரருடன் இருப்பது மற்றவர்களுக்கு வேதனையாக இருக்கலாம். அவர்கள் எதையாவது அல்லது யாரையாவது விரும்பும்போது அவர்கள் மிகவும் கோரும் மற்றும் துணிச்சலானவர்களாக மாறுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தேடும் ஒன்றைக் கண்டுபிடிக்கும் வரை காத்திருக்கத் தயாராக இருக்கிறார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தில் எளிதில் முடிவெடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் விதிவிலக்காக உயர்ந்த தரங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் பரிபூரணமாக இருக்க முயற்சி செய்கிறார்கள். மேலும் தங்களைச் சுற்றியுள்ளவர்களும் இதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குறைந்த தரம் கொண்ட ஒருவருடன் அவர்களால் இருக்க முடியாது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்ன வேண்டும் என்ற பட்டியல் உள்ளது. அவர்கள் அந்த பட்டியலை கடைபிடிக்கிறார்கள். எந்த வகையிலும் விஷயங்களை சமரசம் செய்ய மாட்டார்கள். எத்தனை காலமானலும் அவர்கள் காத்திருக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் சரியான துணையை அல்லது தங்களுக்கு சரியாகப் பொருந்தக்கூடிய சரியான நபரைக் கண்டுபிடிக்கும் வரை காத்திருக்க விரும்புகிறார்கள்.

மகரம்
ஒரு காதல் துணையைத் தேடும் போது மகர ராசிக்காரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுகோல் உள்ளது. இது அவர்களின் தொழில் வாழ்க்கையிலும் அதேபோல நடக்கிறது. அங்கு இந்த ராசிக்காரர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்போது மட்டுமே அவை நிறைவேற்றப்படும். மகர ராசிக்காரர்கள் எல்லாவற்றிற்கும் உயர் தரத்தைக் கொண்டுள்ளனர். மேலும் அவர்களுடன் எல்லா விஷயத்திலும் ஒருவர் பொருந்துவது மிகவும் வெறுப்பாக இருக்கும்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகியவை மேற்கூறிய ராசிகளை விட மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. இந்த ராசிக்காரர்கள் அதிகமாக கோபமோ விரக்தியோ இல்லாமல் தேவைப்படும் இடத்தில் சமரசம் செய்து கொள்ளலாம். இவர்கள் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications