Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
இந்த 5 ராசிக்காரங்க தாங்கள் காதலிக்க தகுதியே இல்லாதவங்கனு நினைக்கிறாங்க... உங்க ராசி இதுல இருக்கா?
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் உறுதியற்றவர்களாக இருப்பர்கள். எது சரி? எது தவறு? என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் பிரச்சனை செய்வார்கள்.
காதல் எல்லாருக்கும் பிடித்த மிகவும் அற்புதமான உணர்வு. எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒருமுறையாவது காதல் உணர்வு ஏற்பட்டிருக்கும். காதலுக்கு எந்த பேதமும் பாகுபாடும் கிடையாது. ஆனால், காதலிப்பவர்களிடையே பாகுபாடுகள், வேறுபாடுகள் போன்ற பல விஷயங்கள் உள்ளன. பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கையில் ஜெயிக்க அவர்களின் காதல் உறுதுணையாக இருந்திருக்கும். காதல் அவர்களை பொறுப்புள்ளவராக மாற்றுகிறது, தொழில் வாழ்க்கையில் முன்னேற வைக்கிறது மற்றும் வாழ்க்கையில் உங்களுக்கு எல்லா சந்தோஷங்களையும் கொடுக்கிறது. ஆனால், சிலர் காதல் என்று வரும்போது மிகவும் எதிர்மறையாக சிந்திக்கிறார்கள் மற்றும் மதிப்பற்றவர்களாக உணர்கிறார்கள். இந்த உணர்ச்சி மிகவும் சக்தி வாய்ந்தது. சில சமயங்களில், அது ஒரு பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அவர்கள் அன்பிற்கு தகுதியற்றவர்களாகவும், மரியாதையவர்களாகவும் உணரலாம். ஏனென்றால் அவர்கள் மற்றவர்களின் முன் தங்கள் சொந்த உணர்வுகளை வெளிப்படுத்தவோ அல்லது சொந்தமாக வைத்திருக்கவோ மிகவும் பயந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே, காதலுக்குத் தகுதியற்றவர்கள் என உணரும் ராசிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டை முகம் கொண்டவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் தாங்கள்தான் உலகின் ராஜா மற்றும் ராணி என்று உணருவார்கள். மற்ற நேரங்களில், அவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும், சாந்தகுணம் உடையவர்களாகவும் உணர்கிறார்கள். இந்த ராசிக்காரர்களால் அவர்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் பிற மக்களிடமிருந்து ஆறுதலையும் ஆதரவையும் தேடுகிறார்கள். இது மற்றவர்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் உறுதியற்றவர்களாக இருப்பர்கள். எது சரி? எது தவறு? என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் பிரச்சனை செய்வார்கள். சில நேரங்களில் சிக்கலான உணர்ச்சிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று அவர்களுக்குத் தெரியாது. அதனால், பெரும்பாலான நேரங்களில் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை காயப்படுத்தக்கூடிய மோசமான எதிர்வினையை காட்டுகிறார்கள். இதனால், துலாம் ராசிக்காரர்கள் இறுதியில் காதலிக்க மிகவும் தகுதியற்றவர்களாக உணர்கிறார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்களை கொஞ்சம் அதிகமாக சந்தேகிக்கிறார்கள். இதனால், அவர்கள் தங்களைத் தாங்களே விமர்சிக்க முனைகிறார்கள். இதனால் நிறைய மன மற்றும் உணர்ச்சி காயங்களை ஏற்படுத்துகிறார்கள். தங்கள் காதலருடன் அல்லது மற்றவர்களுடன் அன்பாக இருக்க உணர்ச்சிகளுடன் போராடுகின்றனர். எனவே அவர்கள் அடிக்கடி காதலிக்க தகுதியற்றவர்களாக உணர்கிறார்கள். இது அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து விரைவில் பிரிந்து செல்ல வழிவகுக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ உதவும் மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒரு வசதியான வாழ்க்கை முறையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இல்லாதது, பாதிக்கப்படக்கூடிய மற்றும் காதல் மற்றும் உணர்ச்சிகளுக்கு உணர்திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம். அன்பை எப்படி ஏற்றுக்கொள்வது என்பது அவர்களுக்குத் தெரியாது. இதனால், மற்றவர்களை காதலிக்க அவர்கள் தகுதியற்றவராக நினைக்கிறார்கள்.

மீனம்
உறவின் மோசமான பக்கங்களை அவர்களால் கையாள முடியாது. எனவே, இந்த ராசிக்காரர்கள் எந்த விதத்திலும் அவர்களை காயப்படுத்தக்கூடிய எந்தவொரு உறவிலிருந்தும் விலகி இருக்க விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் வாழ்க்கை முழுக்க தனியாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் தனிமையில் இருக்கவும் காதலிக்க தகுதியவற்றவர்கள் என்ற உணர்வு அவர்களின் மனதில் இருக்கும்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் அன்பை அதன் தூய்மையான வடிவத்தில் தழுவுகின்றன. அவர்கள் காதலிக்கவோ அல்லது காயப்படவோ பயப்படுவதில்லை. காதலில் விழுவது, முறிவுகள், வலிகள் போன்றவை மனிதனாக இருப்பதன் ஒரு பகுதி என்று அவர்கள் நம்புகிறார்கள். அதனால், இந்த ராசிக்காரர்கள் அன்பை முழு மனதுடன் தழுவுவார்கள்



Click it and Unblock the Notifications











