For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிக்காரர்கள் காதலில் ரொம்ப மோசமானவர்களாம்... இவங்கள நம்பினா அதோகதிதான்...!

மிதுன ராசிக்காரர்கள் தங்களைக் கட்டிப்போடுவார்கள் என்று அவர்கள் கருதும் எந்தவொரு தொடர்பிலிருந்தும் அவர்கள் ஓடிவிடுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு உறுதிப்பாட்டை எடுக்கும்போது அது சாத்தியமற்றதாக ஆகிறது.

|

ஒரு உறவில் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வது என்பது மிகவும் சவாலானது. ஆண், பெண் இருவரும் உறவில் காதலையும் நம்பிக்கையும் வளர்த்து ஆயுள் முழுவதும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும். உறவை நீண்ட காலம் மகிழ்ச்சியாக் கொண்ட செல்ல விஷயங்களை தம்பதிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு உங்களுக்கு ஜோதிடமும் உதவும். சில ராசிக்காரர்கள் தங்கள் உறவை வளர்ப்பதில் ஆச்சரியமாக இருக்கிறார்கள். இருப்பினும், அதில் தவறான மற்றும் கெட்ட மனிதர்களும் உள்ளன. இந்த தவறான மனிதர்களால் உங்கள் வாழ்க்கையே வீணாகிவிடும்.

zodiac signs who are terrible at relationships in tamil

ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இவ்வாறு உள்ளனர். அவர்கள் அர்ப்பணிப்புப் பயம் கொண்டவர்கள் அல்லது யதார்த்தத்தையும் யதார்த்தமான உறவையும் ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். எனவே உறவுகளில் பயங்கரமான அந்த 5 ராசிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். உங்கள் பங்குதாரர் அவர்களில் ஒருவரா என்பதை அறிய இக்கட்டுரையை முழுவதும் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள், ஆரம்பத்திலிருந்தே தங்கள் உறவைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் பெரும்பாலும் தவறு செய்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் உறவை தொடங்குவதற்கு முன்பே ஒரு உறவை பலவீனப்படுத்தும் சிந்தனை காரணிகளை அதிகமாக வளர்த்துக்கொள்கிறார்கள். இதனால், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கூலான வாழ்க்கையை வாழுகிறார்கள். இதனால், அவர்கள் சார்ந்த அனைவரையும் கஷ்டப்படுத்துகிறார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மனிதர்களைச் சோதித்து, சோதனைகளை நடத்துவது, சில சமயங்களில் எல்லை மீறுவது போன்ற கெட்ட பழக்கம் உள்ளது. அவர்கள் தங்கள் கூட்டாளரைப் பற்றி உறுதியாக இருக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால், மற்றவர்கள் அவர்கள் மீதான ஆர்வத்தை இழக்க முனைகிறார்கள். அந்த நம்பிக்கையின் பாய்ச்சலை இந்த ராசிக்காரர்கள் நம்புவதில்லை.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தங்களைக் கட்டிப்போடுவார்கள் என்று அவர்கள் கருதும் எந்தவொரு தொடர்பிலிருந்தும் அவர்கள் ஓடிவிடுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு உறுதிப்பாட்டை எடுக்கும்போது அது சாத்தியமற்றதாக ஆகிறது. இந்த ராசிக்காரர்கள் ஒரு உறவில் மட்டும் இருக்க விரும்பவில்லை.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் ஒரு கூட்டாளரின் மீது மிகவும் வெளிப்படையாகவும் மனக்கிளர்ச்சியுடனும் உணர்வுகளை கொண்டிருக்கலாம். அவர்கள் குறுகிய கால, சாதாரண உறவுகளை விரும்புகிறார்கள். இது அனைவருக்கும் நன்றாகப் போகாது. அவர்கள் தங்கள் கூட்டாளரை உணர்ச்சிவசமாக வெளியேற்ற முனைகிறார்கள். இது நீண்ட கால உறவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் அன்பின் கருத்தை விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் உறவுகளில் மிகவும் மோசமாக இருக்கலாம். அவர்களின் உணர்ச்சிகள் அவர்களை அதிகமாக ஆள்கின்றன. மேலும் இந்த ராசிக்காரர்கள் மூடநம்பிக்கை கொண்டவர்கள். மீன ராசிக்காரர்கள் யதார்த்தமான மற்றும் கடினமான சூழ்நிலைகளை விரும்புவதில்லை. மேலும் உங்களை உறவிலிருந்து வெளியேற்றும் போக்கு அவர்களுக்கு உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

zodiac signs who are terrible at relationships in tamil

Here we are talking about the zodiac signs who are terrible at relationships in tamil.
Story first published: Friday, April 8, 2022, 16:12 [IST]
Desktop Bottom Promotion