Just In
- 5 hrs ago
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு
- 5 hrs ago
உங்க குழந்தையோட ராசிப்படி... நீங்க அவர்கள இப்படி வளர்த்தாதான் பெரிய ஆள வருவாங்களாம் தெரியுமா?
- 6 hrs ago
உலகம் முழுவதும் பெரும்பாலான ஆண்களுக்கு மரணம் ஏற்பட இந்த 5 நோய்கள்தான் காரணமாக உள்ளதாம்... ஜாக்கிரதை!
- 6 hrs ago
இந்த உணவுகளை சாப்பிட்டா முடி அதிகமா கொட்டி சீக்கிரம் வழுக்கை வந்துடுமாம்..
Don't Miss
- News
சோகத்தின் உச்சம்.. ஆந்திராவில் அறுந்து விழுந்த மின்கம்பி.. ஆட்டோவில் சென்ற 8 பேர் உடல் கருகி சாவு
- Movies
நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் எப்போது?.. சுடசுட வெளியான தகவல்!
- Sports
Breaking - ரோகித் சர்மா விலகல்.. பும்ரா, ரிஷப் பண்ட்க்கு புதிய பதவி.. பிசிசிஐ அதிரடி முடிவு
- Finance
கணவனை வாடகைக்கு விட்ட மனைவி.. அடபாவிகளா.. இப்படி கூடவா பண்ணுவாங்க..?!
- Automobiles
சொன்னபடியே 2வது காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திட்டாங்க... இதுவும் மேட்-இன்-சென்னை தயாரிப்புதாங்க!
- Technology
Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த 5 ராசிக்காரங்க பன்முகத் திறமைசாலிகளாக இருப்பாங்களாம்... இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான்...!
திறமைசாலியாக இருப்பது நிச்சயம் நீங்கள் பெருமைப்பட வேண்டிய ஒன்று. உங்களது திறமைகளை மெருகேற்றுவதும், மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும் திறமையைப் பெற்றிருப்பதும் ஒரு பரிசாகும். நீங்கள் திறமையானவராக இருக்கும்போது, நீங்கள் ஒரு இயல்பான திறமையைப் பெறுவீர்கள், மேலும் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ளும் குணமும் கொண்டிருப்பார்கள்.
சிலர் திறமைசாலிகள் மட்டுமல்ல பல திறமைகளின் உறைவிடமாகவும் இருப்பார்கள். ஒன்றல்ல பல துறைகளில் திறமைசாலியாக இருக்கும் வரம் அவர்களுக்கு இருக்கும். இந்த பன்முகத் திறமை சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். ஒரே நேரத்தில் பல்வேறு துறைகளில் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் பன்முகத் திறமை கொண்ட ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் கலை ஆர்வம் மற்றும் படைப்பாற்றல் கொண்டவர்கள். ஓவியம் வரைவதிலும், பாடுவதிலும், இசைக்கருவி வாசிப்பதிலும் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆர்வமுள்ளவர்களாகவும், மற்றவர்களை பேசி மயக்குவதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். அதேசமயம் இவர்கள் எழுதுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அனைத்திலும் பர்பெக்ட்டானவர்கள் மட்டுமல்ல, கன்னி ராசிக்காரர்கள் அவர்களிடம் பல திறமைகளையும் கொண்டுள்ளனர். மற்றவர்கள் அதிகம் விரும்பாத அல்லது தேர்ந்தெடுக்கும் துறைகளில் இவர்கள் நிபுணராக விரும்புவார்கள். இந்த குணம் ஆரம்பத்திலிருந்தே அவர்களிடம் உள்ளது. கூடுதலாக, அவர்கள் புதிய விஷயங்களை விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு எப்போதும் முன்மாதிரியாக இருக்க இவர்கள் விரும்புவார்கள்.
MOST READ: இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில யாரையுமே முழுசா நம்ப மாட்டாங்களாம்...இவங்க கூட இருக்கறதே தண்டனைதான்!

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பல துறைகளில் நிபுணத்துவம் பெற வேண்டுமென்று நினைப்பார்கள். அதற்காக தொடர்ந்து முயற்சிகளையும் செய்வார்கள். இவர்கள் சிறப்பாக பாடுவார்கள், நடிப்பார்கள் மற்றும் கதை சொல்வார்கள். இவர்கள் நம்பிக்கையுடனும், வேடிக்கையாகவும், தங்கள் பார்வையாளர்களை வேடிக்கையாக வைத்திருக்க முடியும். இவர்களின் இந்த குணத்தாலேயே இவர்களிடம் பழக விரும்புவார்கள்.

கும்பம்
புதிய மற்றும் வழக்கத்திற்கு மாறான வழிகளில் விஷயங்களைச் செய்வதில் கும்ப ராசிக்காரர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் யோசனைகள் எப்போதும் ஒரிஜினலாதாகவும், மற்றவர்களின் சிந்தனைகளில் இருந்து வித்தியாசமானதாகவும் இருக்கும். இவர்கள் ஆக்கப்பூர்வமான மற்றும் புரட்சிகர யோசனைகளால் நிரப்பப்பட்டுள்ளனர். இதனால் மற்றவர்களுக்கு இவர்கள் வழிகாட்டியாக இருப்பார்கள்.

மீனம்
மீனத்தில் பிறந்தவர்கள் படைப்பாற்றல் தேவைப்படும் அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். கவிதை எழுதுவதிலும், ஓவியம் வரைவதிலும், இசைக்கருவிகளை வாசிப்பதிலும் வல்லவர்கள். அவர்கள் கலை, கற்பனை மற்றும் படைப்பாற்றல் திறன் கொண்டவர்கள். புகழ்பெற்ற கலைஞர்கள் பலரும் மீன ராசிகளில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.