Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
இந்த 5 ராசிக்காரங்க கல்யாணத்துக்கு பிறகு உங்கள 'அப்படி' காதலிப்பாங்களாம்...உங்க துணையோட ராசி என்ன?
கடக ராசி நேயர்கள் அனைத்திலும் அன்பை உணர்கிறார்கள். அவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள் மற்றும் அவர்களின் துணை என்ன செய்கிறார் என்பதை ஆழமாக புரிந்துகொள்கிறார்கள்.
எல்லாருடைய வாழ்விலும் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு திருமணம். ஆணும் பெண்ணும் திருமண உறவில் இணைந்து வாழ்க்கையை தொடங்கும்போது, பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அவற்றை தம்பதிகள் இருவரும் இணைந்து மேற்கொள்ளும்போது, உறவு வலுவடைகிறது. திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவியாக இல்லாமல் காதலர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் உறவை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். காதல் மற்றும் உணர்ச்சிகள் என்று வரும்போது சிலர் சிறந்த ரொமாண்டிக் நபர்களாக அறியப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் துணையின் உணர்வுகளை திறம்பட புரிந்து கொள்ளும் ஆழ்ந்த காதல் உணர்வை கொண்டுள்ளனர். திருமண உறவில் இந்த வகையான நபர்கள் தங்கள் துணையின் உணர்வுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இதனால், உறவு மிகவும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் பல விஷயங்களை செய்வார்கள். இந்த குணாதிசயங்கள் உங்களுக்குள் இருக்கிறதா? இல்லையா? என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், திருமணத்திற்கு வரும்போது சிறந்த காதலர்களாக இருக்கும் சில ராசி அறிகுறிகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தொடர்ந்து தங்கள் திருமண உறவை மகிழ்ச்சியானதாகவும் அன்பானதாகவும் மாற்ற முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்கள் துணையை கவனித்துக்கொள்வதற்கு நிறைய முயற்சி எடுக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணைக்கு அதிக ஆச்சரியங்களைத் தருவார்கள் மற்றும் அவர்களை மிகவும் சிறப்பாக உணர வைப்பார்கள். அவர்கள் தன்னிச்சையாக ஒரு டேட்டிங் அலல்து சுற்றலா என தங்கள் கூட்டாளரை அழைத்துச் செல்வார்கள். இந்த வாழ்க்கையை தங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ இந்த ராசிக்காரர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

கடகம்
கடக ராசி நேயர்கள் அனைத்திலும் அன்பை உணர்கிறார்கள். அவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள் மற்றும் அவர்களின் துணை என்ன செய்கிறார் என்பதை ஆழமாக புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் விரும்புவது, தங்கள் துணையை உலகத்தில் உள்ள அனைவரையும் விட மிக சிறப்பாக உணர வைப்பதுதான். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் தங்கள் மனைவியை ஒருபோதும் மோசமாக உணர வைக்க மாட்டார்கள். தங்கள் மனைவியை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்க இந்த ராசிக்காரர்கள் விரும்புகிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் பெருமையாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனைவிக்கு தேவையான மற்றும் தகுதியான அனைத்து கவனத்தையும் கொடுப்பார்கள். அவர்கள் தங்கள் துணையை ஒரு போதும் சலிப்படையச் செய்வதில்லை. அவர்கள் பாடுபடும் அனைத்துமே தங்கள் மனைவியை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் உணர வைப்பதுதான். சிம்ம ராசிக்காரர்களின் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர்கள் திருமணத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள் என்பதுதான்.

தனுசு
தனுசு ராசிக்கார ஆண்கள் சாகச மற்றும் வேடிக்கையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உணர்வைக் கொண்டுள்ளனர். அது அவர்களை எப்போதும் காதலர்களாகவும் உறவில் மகிழ்ச்சியாக வாழவும் உதவுகிறது. தனுசு ராசிக்காரர்கள் அதை எல்லா நேரங்களிலும் சுவாரஸ்யமாக வைத்திருப்பதை உறுதி செய்வதால் அவர்களின் மனைவி ஒருபோதும் சலிப்படைய மாட்டார்கள். தங்களுக்குத் தெரிந்த மற்ற எல்லா ஜோடிகளையும் விட தாங்கள் சிறந்த மற்றும் மிகவும் வேடிக்கையான திருமண உறவை கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

மீனம்
மீன ராசிக்கார ஆண்கள் தங்கள் மனைவிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் நம்பிக்கையான கணவனாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவதை நம்புகிறார்கள் மற்றும் தங்கள் பங்குதாரர் அதையே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, தங்கள் திருமணத்தை வெற்றிகரமாக நடத்த முயற்சி செய்கிறார்கள். மேலும், இந்த ராசிக்கார ஆண்கள் மனைவியிடம் மிகவும் ரொமாண்டிக்கான நபராக இருப்பார்கள் .

இதர ராசிக்காரர்கள்
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் திருமண விஷயத்தில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் உறவில் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த கடினமாக உணர்கிறார்கள். இதனால், தங்கள் மனைவியையும் திருமண உறவில் வாழ்வதை கடினமாக்குகிறார்கள். ஆதலால், இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையை வாழவே போராடுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
