Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
இந்த 6 ராசிக்காரங்க அநியாயத்துக்கு சுயநலவாதியா இருப்பாங்களாம்... இவங்கள எப்பவும் நம்பிராதீங்க...!
அனைவருக்குமே தங்களின் நன்மை மீது அக்கறையும், தீராத காதலும் இருக்கும், இது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் நம்மைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க மறுக்கும் அளவுக்கு நம்மை நாம் நேசிக்கும்போதுதான் பிரச்சனை எழுகிறது.
அனைவருக்குமே தங்களின் நன்மை மீது அக்கறையும், தீராத காதலும் இருக்கும், இது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் நம்மைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க மறுக்கும் அளவுக்கு நம்மை நாம் நேசிக்கும்போதுதான் பிரச்சனை எழுகிறது. ஏனெனில் அவர்கள் நாசீசிஸ்டுகளாக மாறிவிடுகிறார்கள். இவர்கள் தங்களுக்கு அனைத்தும் நல்லதாக நடக்க வேண்டும் மற்றும் தனக்கு மட்டுமே நடக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.

இவர்களை காதலிப்பதோ அல்லது இவர்களுடன் நண்பராக இருப்பதோ அவ்வளவு எளிதானதாக இருக்காது. இவர்கள் எப்போதும் தங்கள் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துவார்கள். தங்களின் சொந்த பாதுகாப்பை உறுதி செய்ய இவர்கள் யாரையும் விட்டுக் கொடுக்கத் துணிவார்கள். இந்த நாசீஸ்ட் எண்ணம் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
இவர்கள் ஒருபோதும் தாங்கள் தவறு செய்ய மாட்டோம் என்று நம்புகிறார்கள். எனவே அவர்கள் தங்களை கடவுள் போல நினைத்துக் கொள்கிறார்கள். இவர்களால் விமர்சனத்தை பொறுத்துக் கொள்ள முடியாது, ஏனென்றால் அவர்களைப் போல அற்புதம் மற்றும் புகழ்பெற்ற எதுவும் இருக்க முடியாது என்ற கருத்தைல் அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். தங்களின் கட்டுப்பாட்டிற்கு அடிபணியும் நண்பர்களையும் ,காதலையும் இவர்கள் விரும்புகிறார்கள். காளையின் மிக மோசமான முரட்டுத்தனம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

விருச்சிகம்
தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் இல்லாத எந்த உறவையும் இவர்கள் விரும்பமாட்டார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்குக் கடன்பட்டவர்கள் என்று நினைக்கிறார்கள். சிறந்த சுயநல ராசி அறிகுறிகளில் ஒன்றான இவர்களின் நாசீசிஸத்தை மக்கள் உண்மையிலேயே நேசிக்கும் வரை பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் அவர்களின் இதயங்கள் உடைந்து போகும்போது அவர்கள் கட்டுப்படுத்த முடியாத மிருகங்களாக மாறுகிறார்கள். அவர்கள் அனைவரையும் வசைபாடுகிறார்கள் மற்றும் அவர்களின் கோபமும், வார்த்தைகளும் வன்முறைக்கு குறைவானது அல்ல. மற்றவர் எவ்வளவு மோசமாக உணரலாம் என்று யோசிக்காமல், அவர்கள் மனதில் தோன்றுவதை இவர்கள் பேசுவார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் எவ்வளவு சுயநலமாக இருப்பார்கள் என்பது இவர்களை அறிந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் இதனை இவர்கள் எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் தங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாத சுதந்திரமான ஆத்மாக்கள் என்று நினைக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்கான அவர்களின் வேட்கை அவர்களை சுயநல இராசி அறிகுறிகளில் ஒன்றாக மாறவைக்கிறது. கும்ப ராசிக்காரர்கள் தங்களைத் தவிர வேறு யாரைப் பற்றியும் சிந்திப்பதில்லை. அவர்கள் எதைச் செய்தாலும் அதைத் தங்கள் வசதிக்காகச் செய்கிறார்கள். அவர்கள் மிகவும் கிளாஸ்ட்ரோபோபிக் என்று உணர்ந்தால் மற்றவர்களை உடனே வெளியேத் தள்ளிவிடுவார்கள், அடுத்த நாள் அவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டதாகக் கூறுவார்கள் மற்றும் அவர்களைத் திரும்பி வருமாறுக் கூறுவார்கள். மக்களின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அவர்கள் முற்றிலும் புறக்கணிப்பது அவர்களை மிகவும் சுயநல ராசியாக ஆக்குகிறது.

மேஷம்
இவர்கள் இந்த உண்மையை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் அனைத்தையும் தங்கள் மகிழ்ச்சிக்காக செய்கிறோம் என்பதை நன்குஅறிவார்கள். மேஷ ராசிக்காரர்கள் எதையாவது விரும்பினால், அவர்கள் அதைப் பெறுவதற்கு மற்றவர்களை கவிழ்க்க வேண்டுமென்ற சூழ்நிலை வந்தாலும் அதனைத் தயங்காமல் செய்வார்கள். மக்களுடன் பச்சாதாபம் கொள்ள இயலாமை அவர்களின் மிகவும் நச்சுப் பண்பு மற்றும் சுயநல இராசி அறிகுறிகளின் பட்டியலில் அவர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள். அவர்கள் எல்லா நேரங்களிலும் தங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள், அவர்கள் அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. இந்த ராசிக்காரர்கள் மிகவும் கர்வமானவர்கள் மற்றும் தங்களை தலைவர்களாக நிலைநிறுத்துவதிலேயே இவர்கள் அக்கறைக் கொண்டுள்ளார்கள். இவர்கள் தங்களை தன்னம்பிக்கையின் அடையாளமாக நினைக்கலாம் ஆனால் மற்றவர்கள் இவர்களை ஆணவத்தின் அடையாளமாகத்தான் கருதுவார்கள். தங்களின் புகழையும், அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள இவர்கள் சுயநலமாக நடந்துக் கொள்கிறார்கள்.

மிதுனம்
மிகவும் நட்பாக பழகக்கூடிய மற்றும் மிகவும் வேடிக்கையான நபர்களாக இவர்கள் இருப்பதால் இவர்களின் சுயநலத்தை மற்றவர்கள் பெரிதாக கவனிப்பதில்லை. அவர்களின் வேடிக்கையான கதைகளும் நகைச்சுவை உணர்வும் அவர்களின் சுயநலத்தையும், அகங்காரத்தையும் மறைத்து விடுகிறது. இவர்கள் பல ஆளுமைகளை கொண்டவர்கள், எனவே இவர்கள் இப்போது உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது. இவர்கள் மற்றவர்களை ஏமாற்ற அவர்களுக்கு பிடிக்கும்படி தங்கள் முகத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவதையும், போற்றப்படுவதையும் இவர்கள் விரும்புகிறார்கள். எனவே அதற்காக அனைத்தையும் திட்டமிட்டு செய்வார்கள்.



Click it and Unblock the Notifications











