Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
இந்த 5 ராசிக்காரங்களுக்கு மோசமான எதிரியே அவங்கதான்... இவங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்குறவங்க...!
நாம் அனைவரும் நமது தோல்விகளுக்கு மற்றவர்களைக் குறை கூற விரும்புகிறோம், ஆனால் பெரும்பாலான நேரங்களில் நம் தோல்விகளுக்கு நாம்தான் காரணாமாக இருப்போம்.
நாம் அனைவரும் நமது தோல்விகளுக்கு மற்றவர்களைக் குறை கூற விரும்புகிறோம், ஆனால் பெரும்பாலான நேரங்களில் நம் தோல்விகளுக்கு நாம்தான் காரணாமாக இருப்போம். மற்றவர்களிடம் எப்பொழுதும் குறை காணும் நாம் பெரும்பாலும் நமக்குள் இருக்கும் மோசமான குணங்களைப் பற்றி ஆராய மறந்து விடுகிறோம். நமது பேராசை, ஏக்கம், நடத்தை, கோபம் என நமக்குள் இருக்கும் எதிர்மறை குணங்கள் பெரும்பாலும் நம்மை அழிவுப்பாதையை நோக்கி இழுத்துச் செல்கின்றன.

நமக்குள் இருக்கும் எதிர்மறை குணங்களை அறிந்து அவற்றை குறைத்து நேர்மறை குணமாக மாற்றும்போதே நாம் வெற்றியை நோக்கி முதலடி எடுத்து வைப்போம். இல்லயெனில் நமக்கு எதிரியாக நாமே மாறிவிடுவோம், இதுபோன்ற சூழலில் நமக்கு குழியை நாமே தோண்டிவிடுகிறோம். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களுக்கே மோசமான எதிரிகளாக மாறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாதமாக இருக்கும் ஒரு போக்கைக் கொண்டுள்ளார்கள், இது அவர்களை விடாமுயற்சியும், உறுதியும் கொண்டவர்களாக உருவாக்குகிறது, ஆனால் அது அவர்களைத் தடுக்கத் தொடங்கும் போது நீண்ட காலத்திற்கு அவர்களை காயப்படுத்தலாம். அவர்கள் விட்டுக்கொடுக்க விரும்பாததால், இது ஆரோக்கியமற்ற உறவில் அவர்களை இருக்கச் செய்கிறது, மேலும் ஆக்கப்பூர்வமான முடிவையும் எடுக்க விடாமல் தடுக்கிறது. சமநிலையை இவர்கள் கற்றுக்கொள்ளாத வரை ஒருபோதும் இவர்கள் வெற்றியின் பக்கம் திரும்ப முடியாது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அவர்களின் பரிபூரணத்தன்மை காரணமாக அவர்களின் சொந்த மோசமான எதிரியாக மறுக்கிறார்கள். எல்லாமே குறைபாடற்றதாக இருக்க வேண்டும் என்பதற்கான இந்த வெறித்தனமான எண்ணம் நரம்பியல்வாதத்திற்கு வழிவகுக்கிறது. இவர்கள் தங்களுக்கு அமைத்துக் கொண்ட சாத்தியமற்ற உயர்ந்த மற்றும் பெரும்பாலும் அடைய முடியாத தரநிலைகளைத் அடையத் தவறினால் அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது. முக்கிய பிரச்சனை என்னவென்றால், இதற்கு எந்த தீர்வும் இல்லை. இவர்களின் ஒவ்வொரு சாதனைக்குப் பிறகும் அது அவர்களுக்கு அடுத்த இலக்கை நிர்ணயிக்கிறது. அது அவர்களை ஒரு முடிவில்லாத தேடலில் வைக்கிறது, அது அவர்களை ஒருபோதும் அமைதியாக இலக்கை அடைய அனுமதிக்காது.

மிதுனம்
நிதி விஷயத்தில் மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் சொந்த எதிரியாக மாறுகிறார்கள். இவர்கள் பொறுப்பானவர்களாக இருந்தாலும், பொருட்களின் மீதான இவர்களின் ஆர்வம் இவர்களை அளவின்றி செலவழிக்கச் செய்கிறது. மிகவும் ஆடம்பரமான, ஸ்டைலான, ட்ரெண்டிங்கான விஷயங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இது அதிக செலவில் அவர்களைத் தள்ளுகிறது. இது அவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் அர்த்தமற்ற கோபம் அவர்களை அவர்களுக்கே மோசமான எதிரிகளாக மாற்றுகிறது. இவர்கள் எந்த விஷயத்தையும் அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள். இவர்கள் நிஜமாகவோ அல்லது கற்பனையாகவோ இவர்க்ளுக்கு தகுதியானவர்கள் என்று உணர்ந்தால் இவர்கள் மனதில் எழும் ஒரே எண்ணம் பழிவாங்குதல் மட்டும்தான். இவர்களின் பழிவாங்கும் செயல்கள் அவர்களுக்கு ஒரு நல்ல தோற்றம் அல்ல. இது அவர்களின் மோசமான பக்கத்தைக் காட்டும். இதுவே இவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமையும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் அவர்களின் பாதுகாப்பின்மை காரணமாக அவர்களின் சொந்த மோசமான எதிரியாக மாறுகிறார்கள். அவர்கள் எப்போதும் எதிர்மறையாகவே நினைக்கிறார்கள் மற்றும் அவர்களின் கற்பனையை அவற்றுடன் ஓட விடுகிறார்கள். இது அவர்களின் உறவுகளை தொந்தரனாவதாக மாற்றுகிறது. அனைவரும் தங்களை ஏமாற்றுவதாகவே இவர்கள் நினைக்கிறார்கள். ஒவ்வொரு சிறிய கவனக்குறைவும் தங்கள் காதலரின் ஆர்வத்தை வேறொருவர் கவர்ந்ததற்கான அடையாளமாக இவர்கள் நினைப்பார்கள். இதனால் இவர்கள் பெரும்பாலான வாழ்க்கையை தனிமையில் கழிக்க நேரிடுகிறது.



Click it and Unblock the Notifications