Latest Updates
-
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
2020-ல் இந்த ராசிக்காரங்கதான் சிறந்த ஜோடியாக இருக்கப் போறாங்களாம் தெரியுமா?
வரப்போகிற ஆண்டில் உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது, எந்த ராசிக்காரர் உங்களுக்கு சிறந்த துணையாக இருக்கப் போகிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
2019 கிட்டதட்ட முடியப்போகிறது, அடுத்த வருடம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது என்று கணிக்கப்பட்டிருக்கும். பொதுவாக நாம் வருட பலன்கள் என்று பார்க்கும்போது ஆரோக்கியம், காதல், அதிர்ஷ்டம் போன்றவற்றிற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால் தனிப்பட்ட உறவுகள் குறித்து நாம் எப்பொழுதும் கவனம் செலுத்துவதில்லை.

வரப்போகிற ஆண்டில் உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது, எந்த ராசிக்காரர் உங்களுக்கு சிறந்த துணையாக இருக்கப் போகிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிவில் 2020-ல் எந்தெந்த ராசிக்காரர்கள் அற்புதமான ஜோடிகளாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம் மற்றும் துலாம்
மிதுனம் மற்றும் துலாம் இரண்டும் காற்று அறிகுறிகளாகும். 2020 இவர்களின் காதலுக்கு நல்லதொரு தொடக்கத்தைக் கொடுக்கப் போகிறது. இவை இரண்டும் ஒரே மாதிரியான அறிகுறிகளாக இருந்தாலும் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. இந்த வேறுபாடுகள் ஒருவருக்கொருவர் ஈர்க்கும் கனவு ஜோடியாக அவர்களை மாற்ற உதவும். துலாம் ராசிக்காரர்கள் இந்த ஆண்டு சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மையை பெற விரும்பும்போது, மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் உற்சாகத்தை சேர்ப்பார்கள். மேலும் மிதுன ராசிக்காரர்கள் துலாம் ராசிக்காரர்களின் சுயமரியாதை பிரச்சினைகளை தீர்க்க உதவுவார்கள். இந்த சிறப்பான ஜோடிகளின் சிறந்த குணம் என்னவென்றால் இருவருமே தங்களுக்குள் அதிகரித்து வரும் காதலை அறியாமலேயே காதலித்துக் கொண்டு இருப்பார்கள். இவை அனைத்தும் தன்னிச்சையாகவே நடக்கும், இவர்களுக்குள் தகர்க்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தும்.

கன்னி மற்றும் மகரம்
இந்தியாவின் துரோகிகள்... இவர்களின் துரோகத்தால்தான் சிப்பாய் கலகம் தோல்வியடைந்தது...!இந்த ஆண்டு சிறப்பான காதல் உறவை வளர்க்க போகும் முக்கியமான ஜோடி மகரம் மற்றும் கன்னி ராசிதான். இவர்கள் இருவரும் வரப்போகிற ஆண்டில் காதலை மட்டுமே தேடிக்கொண்டே இருப்பார்கள், இதுவே இவர்களை சிறந்த ஜோடியாக மாற்றும். கன்னி மற்றும் மகர ராசிக்காரர்கள் 2020-ல் அமைதி மற்றும் சமநிலையைத் தேடுவார்கள். இவர்கள் ஏற்ற இறக்கங்களுடன் கூடிய உணர்வுகளை விரும்பமாட்டார்கள். இவர்களுக்கு முதிர்ச்சியான மற்றும் நிலையான உணர்வை மட்டுமே விரும்புவார்கள். இவர்கள் இருவரும் எதிர்பார்க்கும் உறவை இந்த வருடத்தில் பெறுவார்கள்.

மேஷம் மற்றும் கும்பம்
மேஷம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் தொடக்கம் முதலே அற்புதமான ஆண்டாக இருக்கும். அவர்கள் ஒரே மாதிரியான ஆற்றல்களைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் இருவரும் துணிச்சலானவர்கள், எப்போதும் தங்கள் வாழ்க்கையில் சில அற்புதமான மாற்றங்களைத் தேடுகிறார்கள். 2020 இவர்கள் எதிர்பார்த்த அதே மாற்றங்களை இவர்களுக்கு வழங்கும். இவர்களுக்கும் தோன்றும் காதல் தாற்காலிகமானதாக இருக்காது, நீடித்து இவர்களுக்குள் காதலை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இவர்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு எப்பொழுதும் சலிப்பு ஏற்படாது, இதனாலேயே இவர்கள் சிறந்த ஜோடியாக இருப்பார்கள். அதே நேரத்தில், இந்த இராசி அறிகுறிகள் இரண்டும் தனித்தன்மையின் வலுவான உணர்வைக் கொண்டுள்ளன, இது அவர்களுக்கு சில தனிப்பட்ட இடங்களுக்கு வாய்ப்பளிக்கும். இந்த சமநிலை அவர்களின் மகிழ்ச்சியின் முக்கிய அம்சமாக இருக்கும்.

சிம்மம் மற்றும் தனுசு
சிம்மம் மற்றும் தனுசு இரண்டும் நெருப்பின் அறிகுறிகளாகும். இந்த இரண்டு ராசிகளும் இணையும்போது அங்கு உணர்ச்சிகளின் திருவிழாவாக இருக்கும். அவர்கள் இருவரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்கள், அவர்கள் எதை உணர்ந்தாலும், அவர்கள் அதை முழு உணர்வோடு உணர்கிறார்கள் என்பதே அவர்களை மிகவும் இணக்கமாக்குகிறது.இந்த ஆர்வமும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் உணர்ச்சிகளும் 2020 ஆம் ஆண்டில் அவர்களை ஒன்றிணைக்கும். இந்த இரண்டு அறிகுறிகளும் இணைந்திருக்கும்போது, அவை இரண்டும் தங்களின் எந்தப் பகுதியையும் பின்னுக்குத் தள்ளிவிடாது, மேலும் அவர்கள் தங்கள் அன்பின் ஆழத்தைக் காட்ட தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார்கள். அடுத்த ஆண்டில் சிம்மம் மற்றும் தனுசு கவனம் செலுத்த வேண்டிய ஒரே விஷயம் பொறுமை. உங்கள் காதல் எல்லா தடைகளையும் விட வலிமையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடகம் மற்றும் மீனம்
இந்த இரண்டுமே நீரின் அறிகுறிகளாகும், இவர்கள் இந்த ஆண்டில் சிறப்பான காதலை பெறப்போகிறார்கள். 2020 ஆம் ஆண்டில் இவர்கள் இருவரும் தங்கள் பாதையை கடக்கும்போது தாங்கள் இருவரும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஜோடி என்பதை அறிவார்கள். கடகம் மற்றும் மீனம் இருவரும் தங்கள் உணர்ச்சிகளுடன் தொடர்பில் உள்ளனர், தங்ககளுக்கு என்ன வேண்டும் என்று இவர்கள் அதனை பெறவும் இவர்கள் பயப்படமாட்டார்கள். இந்த அறிகுறிகளைச் சேர்ந்த ஆழ்ந்த மற்றும் உணர்ச்சிமிக்க அன்பானவர்கள் அனுபவிப்பதைத் தவிர, இந்த இரண்டு இராசி அறிகுறிகளும் அவர்கள் கிட்டத்தட்ட எல்லா மட்டங்களிலும் இணக்கமாக இருப்பதை உணரும், அதுவே அவர்களை ஒரு சரியான ஜோடியாக மாற்றுகிறது. இந்த ஜோடி எதிர்கொள்ளக்கூடிய ஒரே பிரச்சனை படுக்கையறையில் தான். எல்லாவற்றிற்கும் மேலாக, மீனம் என்பது பாலியல் விஷயத்தில் சாகசமானது என்று அறியப்படுகிறது, மேலும் அவர்கள் எப்போதும் புதிய, அற்புதமான விஷயங்களை முயற்சிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் கடக ராசிக்காரர்கள் கூச்சசுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications