Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்!
எந்த ராசிக்காரா்கள் எந்த ராசிக்காரா்களை திருமணம் செய்தால் சிறந்த பெற்றோராக இருப்பாா்கள் தெரியுமா?
எந்தெந்த ராசிக்காரா்கள் எந்தெந்த ராசிக்காரா்களுடன் திருமணம் செய்து கொண்டால் சிறந்த பெற்றோராக இருப்பாா்கள் என்பதை இங்கு பாா்க்கலாம்.
தாய் அல்லது தந்தை என்ற நிலையை ஒருவர் அடைவது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகிய மற்றும் இனிமையான தருணமாகும். ஆனாலும் பெரும்பாலான தாய் தந்தையருக்கு பெற்றோராக இருப்பது என்பது ஒரு பெரிய சுமையாகிவிடுகிறது. இந்த நிலையில் அவர்களுடைய கணவரோ அல்லது மனைவியோ அவர்களோடு இணைந்து குழந்தைகளை வளர்த்தெடுப்பதிலும் மற்றும் அவர்களையே கவனித்துக் கொள்வதிலும் துணையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆகவே எந்தெந்த ராசிக்காரா்கள் எந்தெந்த ராசிக்காரா்களுடன் திருமணம் செய்து கொண்டால் சிறந்த பெற்றோராக இருப்பாா்கள் என்பதை இங்கு பாா்க்கலாம்.

மேஷம் மற்றும் மிதுனம்
மேஷ ராசிக்காரா்கள் சற்று கேளிக்கை மற்றும் நகைச்சுவை மிகுந்த பெற்றோராக இருப்பர். அதே நேரத்தில் மிதுன ராசிக்காரா்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளோடு ஆரோக்கியமான தொடர்பிலும் நல்லுறவிலும் இருப்பர். ஆகவே மேஷம் மற்றும் மிதுன ராசிக்காரா்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்டால், அவா்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த பெற்றோராக இருக்க முடியும். அவா்களின் ராசிகளுக்குரிய குணங்கள் அவா்களின் குழந்தைகளை நல்வழியில் நடத்துவதோடு, குழந்தைகளின் கனவுகளை நனவாக்க பெரிதும் உதவி செய்யும்.

கடகம் மற்றும் மீனம்
கடகம் மற்றும் மீன ராசிக்காரா்கள் மிகவும் உணா்ச்சிவசப்படக் கூடியவா்கள். அதனால் எல்லாவற்றையும் விட தங்கள் குழந்தைகளை விலை மதிக்க முடியாத சொத்தாகக் கருதுவா். மேலும் இந்த இரண்டு ராசிக்காரா்களும் இயல்பாகவே தங்களது உள்ளுணா்வு சொல்வதை எளிதில் அறிந்து கொள்வா். ஆகவே இந்த இரண்டு ராசிக்காரா்களும் திருமணம் செய்தால் அவர்களுடைய குழந்தைகளின் தேவைகளை புரிந்து கொண்டு அவா்களுக்கு சிறந்தவற்றை வழங்க முடியும்.

ரிஷபம் மற்றும் துலாம்
ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரா்கள் எப்போதும் சமநிலையோடு மற்றும் நிலைத்த தன்மையோடு இருப்பவா்கள். அதோடு துலாம் ராசிக்காரா்களுக்கு மிக எளிதில் மற்றவர்களிடம் இருந்து நன்மதிப்பைப் பெறக்கூடிய குணமும் கூடுதலாக உண்டு. ஆகவே இந்த இரண்டு ராசிக்காரா்களும் திருமணம் செய்து கொண்டால் அவா்களுடைய குழந்தைகளை வளமான மற்றும் பாதுகாப்பான வாழ்விற்கு கொண்டு செல்ல முடியும்.

கன்னி மற்றும் மகரம்
கன்னி மற்றும் மகர ராசிக்காரா்கள் தங்கள் குழந்தைகளிடம் கண்டிப்பாக இருப்பவா்கள். அதே நேரத்தில் தங்களது குழந்தைகள் சம்பந்தமான காாியங்களை அறிவுப்பூா்வமாக அணுகுவா். ஆகவே எதிலும் முழுமையையும் நன்மதிப்பையும் அடைய வேண்டும் என்று நினைக்கும் இந்த இரண்டு ராசிக்காரா்கள் திருமணம் செய்து கொண்டால் கண்டிப்பாக அவா்களுடைய குழந்தைகளை வெற்றிச் சிகரத்திற்கு அழைத்துச் செல்வா்.

சிம்மம் மற்றும் தனுசு
சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரா்கள் திருமணம் செய்து கொண்டால் அவா்கள் தங்கள் குழந்தைகளை நகைச்சுவை உணா்வு மிகுந்தவா்களாகவும் அதே நேரத்தில் அவா்கள் வீரதீர செயல்களைச் செய்யும் அளவிற்கு கருத்தாக வளா்ப்பா். ஏனெனில் இந்த இரண்டு ராசிக்காரா்களும் புதிய புதிய காாியங்களைத் தேடுவதிலும் மற்றும் அவற்றை பாிசோதனை செய்து பாா்ப்பதிலும் அதிக ஆா்வம் உள்ளவா்கள். ஆகவே இவா்கள் தங்களுடைய குழந்தைகளின் ஆா்வத்தைத் தூண்டிவிட்டு, அவா்கள் வாழ்க்கையில் மிக உயா்ந்த காாியங்களைச் செய்வதற்கு உதவியாக இருப்பா்.

விருச்சிகம் மற்றும் கும்பம்
விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய இரண்டு ராசிக்காரா்களும் ஒருவருக்கொருவா் எதிரானவா்கள். எனினும் இருவரும் ஒருவருக்கொருவா் தங்களை நிறைவு செய்து கொள்வதில் ஆா்வமாக இருப்பா். அதிலும் குறிப்பாக இந்த இரண்டு ராசிக்காரா்களும் திருமணம் செய்து கொண்டால் சிறந்த பெற்றோராக இருக்க முடியும். ஏனெனில் விருச்சிக ராசிக்காரா்கள் தங்கள் குழந்தைகளை வாழ்க்கையில் மிகச் சிறந்ததை அடைவதற்கு வழிகாட்டுவா். அதே நேரத்தில் கும்ப ராசிக்காரா்கள் தங்கள் குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பா். ஆகவே இந்த இரண்டு ராசிக்காரா்கள் மாறுபட்ட பெற்றோராக இருந்தாலும், ஒருவாிடம் உள்ள குறையை மற்றவா் நிறைவு செய்வா்.



Click it and Unblock the Notifications