Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்
2023-ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருளால் செல்வம் பெருக போகுது...
ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2023 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது 2023 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் முழு அருளும் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்
Yearly Horoscope 2023: 2023 ஆம் ஆண்டு வரப்போகிறது. அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் இந்த புத்தாண்டை தொடங்க காத்துக் கொண்டிருக்கிறோம். முக்கியமாக இந்த புதிய ஆண்டிலாவது நமது நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படாதா என்று பலரும் ஏங்குவதுண்டு. ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2023 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படப் போகிறது.

இதற்கு காரணம் மனித வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு, கேது போன்றவை ராசியை மாற்றுவது தான். இது தவிர லட்சுமி தேவியின் அருளும் அந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் பரிபூர்ணமாக உள்ளது. இப்போது 2023 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் முழு அருளும் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் லட்சுமி தேவியின் ஆசி முழுமையாக கிடைக்கவுள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மேலும் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்றவை நன்றாக இருக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். தொழிலதிபர்கள் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக இருக்கும். லட்சுமி தேவியின் அருள் முழுமையாக கிடைப்பதால், இந்த ஆண்டில் கடனில் இருந்து விடுபடுவீர்கள். வேலையில் நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பிற்கு இருமடங்கு பலன் கிடைக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். வேலையில் செல்வாக்கு அதிகரித்து நன்மைகள் கிடைக்கும். லட்சுமி தேவியின் ஆசியால் திருமண தடைகள் நீங்கும். எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் லட்சுமி தேவியின் முழு அருளும் கிடைக்கும். இதனால் இந்த ஆண்டில் துலாம் ராசிக்காரர்கள் எதிர்பாராத உயரத்தை அடைவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். உறவினர்களுடன் அதிக நேரத்தை செலவிட வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவலைப்பட வேண்டியிருக்காது. ஏனெனில் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். லட்சுமி தேவியின் அருளால் 2023-ல் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கனவுகள் அனைத்தும் நனவாகும். மொத்தத்தில், துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு ஆச்சரியமான ஆண்டாக இருக்கும்.

தனுசு
2023 ஆம் ஆண்டின் சனியின் பிடியில் இருந்து தனுசு ராசிக்காரர்களுக்கு விடுதலை கிடைக்கவுள்ளது. இதனால் இந்த ஆண்டில் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். நிதி ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும் மற்றும் நல்ல லாபமும் கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். இந்த ஆண்டில் உங்களின் கனவுகள் நனவாகும். பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். கடினமாக உழைத்தால், அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. 2023 ஆம் ஆண்டில் வெற்றி உங்கள் வழியில் வரும். வியாபாரத்தில் பல சாதனைகளைப் புரிவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications