For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று உலக ஹலோ தினம் : காதலுக்கு மரியாதை செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்!

உண்மையிலேயே காதலுக்கு முதன் முதலில் மரியாதை செய்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் தான். இவர் இங்கிலாந்து ராணி விக்டோரியா மஹாராணி முன்பாக டெலிபோனை உபயோகிக்கும் முறையை செய்து காட்டினார்.

|

இன்று உலகம் முழுவதும் சர்வதேச ஹலோ தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 47ஆவது உலக ஹலோ தினமாகும். யாரையாவது புதிதாக பார்த்தால், நம்முடைய உதட்டிலிருந்து வெளிப்படும் முதல் வார்த்தை இந்த ஹலோ தான். இது மற்றவர்களின் கவனத்தை நம் பக்கம் திருப்பச்செய்யும் ஒரு மந்திரச் சொல் என்றும் சொல்லலாம். இந்த வார்த்தையை நாம் நம்முடைய உதட்டிலிருந்து வெளிப்படுத்தும் விதத்தைப் பொருத்தே நம் எதிரில் இருப்பவரின் முகபாவமும், பதில் நடவடிக்கையும் இருக்கும். ஆண்டுதோறும் நவம்பர் 21ஆம் தேதியன்று உலக ஹலோ தினம் கொண்டாடப்படுகிறது.

World Hello Day Celebration

உண்மையிலேயே காதலுக்கு முதன் முதலில் மரியாதை செய்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் தான். இவர் இங்கிலாந்து ராணி விக்டோரியா மஹாராணி முன்பாக டெலிபோனை உபயோகிக்கும் முறையை செய்து காட்டினார். அந்த செயல் விளக்கத்தின் போது, அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் அவர் முதலில் உச்சரித்தது ''ஹலோ' என்ற வார்த்தை தான். தன்னுடைய காதலியான மார்கரெட் ஹலோவின் பெயரை சுருக்கி ஹலோ என்று சொன்னார். இன்றைக்கு அதுவே வரலாற்றில் தவிர்க்கவே முடியாக வார்த்தையாக ஆழமாக பதிந்துவிட்டது.

ஹலோ... இந்த வார்த்தை வெறும் வார்த்தை மட்டுமல்ல. நவரச உணர்வுகளையும் இந்த ஒரு வார்த்தையிலேயே வெளிப்படுத்திவிட முடியும். நம்முடைய அன்பை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள, காதலை வெளிப்படுத்த, மற்றவர்களிடம் நம்மை அறிமுகம் செய்து கொள்ள என நவரச உணர்வுகளையும் வெளிப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மேஜிக் வார்த்தை தான் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக ஹலோ தினம்

உலக ஹலோ தினம்

ஹலோ என்ற வார்த்தை முதன்முதலாக இரு நாடுகளுக்கு நடந்து வந்த போரை நிறுத்துவதற்காக பேசப்பட்ட வார்த்தை ஆகும். தங்கள் நாட்டின் படைபலத்தை வைத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு பதிலாக, தகவல் தொடர்பின் மூலமாகவும் தீர்க்கப்படலாம் என்பதை உணர்த்துவதற்காக வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாகும்.

சண்டை மறந்து சமாதானம்

சண்டை மறந்து சமாதானம்

கடந்த 1973ஆம் ஆண்டில், ஆப்பிரக்க நாடான எகிப்து மற்றம் மத்திய கிழக்கு ஆசிய நாடான இஸ்ரேலும் அண்டை நாடுகள் என்பதை மறந்து சண்டை நாடுகளாக மாறி போரில் ஈடுபட்டு வந்தன. அந்த போரை நிறுத்தி, இரு நாடுகளுக்கும் நடந்து வந்த போரை நிறுத்தி சமாதானப்படுத்தி வைக்க, முதன் முதலில் ஹலோ என்ற வார்த்தையை வெளிப்படுத்தி சமாதானப் பேச்சுவார்த்தைய தொடங்கி வெற்றிகரமாக முடித்தனர்.

மந்திரச்சொல்

மந்திரச்சொல்

அன்று தொடங்கிய இந்த ஹலோ என்ற மந்திரச் சொல் தொடர்ந்து சர்வதேச ஹலோ தினமாக மாறியது. இன்றைக்கு உலக நாடுகளில் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச ஹலோ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான முனைவர் பிரையன் மெக்கார்க் மற்றும் ஹார்வேர்டு பல்கலைக்கழக பேராசிரியரான மைக்கேல் மெக்கார்க் ஆகியோரால் இந்த சர்வதேச ஹலோ தினம் உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹலோ ஹலோ சுகமா

ஹலோ ஹலோ சுகமா

இன்றைக்கு உலக மக்கள் அனைவருமே இந்த ஹலோ வார்த்தையை பயன்படுத்தாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு மாறிவிட்டோம் என்பது தான் நிதர்சனம். ஒரு நாளைக்கு சராசரியாக 10 தடவையாவது இந்த வார்த்தையை நாம் பயன்படுத்துவோம். இப்படி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒரு மந்திர வார்த்தையாக மாறிவிட்ட இந்த ஹலோ என்ற வார்த்தை எப்படி உருவானது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஹலோ என்ற வார்த்தை ஜெர்மன் மொழியில் உருவானது. இதற்கு தமிழில் வணக்கம், வந்தனம், நலம் என்ற அர்த்தமாகும்.

காதலுக்கு மரியாதை

காதலுக்கு மரியாதை

இன்றைக்கும் நாம் டெலிபோனிலோ அல்லது மொபைல் போனிலே முதன் முதலில் பேச ஆரம்பிக்கும் வார்த்தை ஹலோ என்பது தான். இந்த வார்த்தை இல்லாமல் பேசினால் அந்த பேச்சின் சாராம்சமே முற்றுப்பெறாது என்றாகி விட்டது. அதெல்லாம் சரிதான், முதன் முதலில் இந்த வார்த்தை யாரால் எப்போது உபயோகிக்கப்பட்டது தெரியுமா? சாட்சாத் அந்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் தான் முதன் முதலில் அந்த வார்த்தையை சொன்னது. டெலிபோனை கண்டுபிடித்த அதே அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் தான் அவர். அவர் மட்டும் இந்த டெலிபோனை கண்டுபிடிக்காமல் இருந்தால், தகவல் தொடர்பில் இந்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்குமா என்பதே சந்தேகம் தான்.

காதலி ஹலோ

காதலி ஹலோ

அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் டெலிபோனை கண்டுபிடிப்பதற்கு முன்பாக சில சாதனங்களை கண்டுபிடித்திருந்தாலும். இது தான் அவருடைய மிகப்பெரிய சாதனையாகும். இந்த சாதனத்தை கண்டுபிடிக்க கிரியா ஊக்கியாக இருந்தது இந்த ஹலோ என்ற வார்த்தை தான். காரணம் என்ன தெரியுமா? ஹலோ என்பது அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லின் காதலியான ஹலோ தான். உண்மையில் காதலுக்கு முதன் முதலில் மரியாதை செய்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் தான். இவருடை காதலியான மார்கரேட் ஹலோ கொடுத்த ஊக்கம் மற்றும் உற்சாகத்தினால் தான் டெலிபோன் சாதனத்தை கண்டுபிடித்தார். தன்னுடைய தொடர்ச்சியான அயராத உழைப்பினால் 1874ஆம் ஆண்டு டெலிபோனை கண்டுபிடித்தார்.

தவிர்க்க முடியாத ஹலோ

தவிர்க்க முடியாத ஹலோ

தன்னுடைய கண்டுபிடிப்பை வர்த்தகப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டினார். தான் கண்டுபிடித்த சாதனத்தை பல்வேறு தரப்பினர் முன்பும் செயல் விளக்கம் செய்து காட்டினார். ஆனால் யாருமே கண்டுகொள்வதாக தெரியவில்லை. இறுதியில், இங்கிலாந்து ராணி விக்டோரியா மஹாராணி முன்பாக டெலிபோனை உபயோகிக்கும் முறையை செய்து காட்டினார். அந்த செயல் விளக்கத்தின் போது, அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் அவர் முதலில் உச்சரித்தது ஹலோ என்ற வார்த்தை தான்.

அன்பாக ஹலோ சொல்லுங்க

அன்பாக ஹலோ சொல்லுங்க

தன்னுடைய காதலியான மார்கரெட் ஹலோவின் பெயரை சுருக்கி ஹலோ என்று சொன்னார். இன்றைக்கு அதுவே வரலாற்றில் தவர்க்கவே முடியாக வார்த்தையாக ஆழமாக பதிந்துவிட்டது. ஆகவே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக ஹலோ தினமான இன்று நீங்கள் சந்திக்கும் அனைவரிடமும் ஹலோ என்று அன்பாக சொல்லி பேசுங்கள். இதன் மூலம் சக மனிதர்களுடனான அன்பையும், நேசத்தையும் உறவையும் பலப்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Hello Day Celebration

Alexander Graham Bell was the first to truly honor love. He showed the use of the telephone in front of Queen Victoria of England. During the presentation, Alexander Graham Bell first uttered the word hello. He said hello to his girlfriend, Margaret Hello.
Story first published: Thursday, November 21, 2019, 15:50 [IST]
Desktop Bottom Promotion